என் மூன்று குழந்தைகளுக்காக உயிர் வாழ்கிறேன். மைனா நந்தினி

  • IndiaGlitz, [Tuesday,April 18 2017]

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரும் அறிந்ததே. கார்த்திக் தற்கொலைக்கு நந்தினியின் தந்தைதான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கார்த்திக் தற்கொலைக்கு மைனாவும் காரணம் என்றும், நந்தினிக்கு ஏற்கனவே அபார்ஷன் நடந்ததாகவும் கார்த்திக்கின் தாயார் குற்றம் சாட்டியிருந்தார்
இந்நிலையில் நடிகை நந்தினி பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது கணவர் தற்கொலை செய்தவுடன் தானும் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்றும் ஆனால் தன்னை நம்பி இருக்கும் மூன்று குழந்தைகளுக்காக உயிர் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
என் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்ட உடனேயே நானும் தற்கொலை செய்திருக்க வேண்டும். ஆனால் என்னை நம்பி என் பெற்றோர், தம்பி உள்ளார்கள். என் பெற்றோர், தம்பியை தவிக்க விட்டு செல்ல விரும்பவில்லை. அவர்கள் மூவரும் என் பிள்ளைகள் போன்று. அந்த பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும் கடமை எனக்கு உள்ளது. அதனால் தற்கொலை செய்யவில்லை.
என் வீட்டில் உள்ள மூன்று குழந்தைகளுக்காக நான் இன்னும் சில காலம் ஓடியாடி உழைக்க வேண்டியிருக்கிறது. மீடியாவில் இருப்பதால், குடும்பப் பிரச்னைகளை எல்லாம் மூடி மறைத்துக்கொண்டு... பல இடங்களில் கட்டாயமாக சிரிக்க வேண்டி இருக்கிறது. ஆடிப்பாடி, சிரித்து நடிக்க வேண்டியிருக்கிறது. அதையும் நான் செய்ய வேண்டும். ஆனால், அதற்கு எனக்குக் கொஞ்சம் ஓய்வு தேவை. ஒரு பெண்ணுக்கு உள்ள சராசரி வலிகளும், வருத்தங்களும் எனக்கும் இருக்கிறது. மன வலி, உடல் வலிகளுடன் போராடுகிறேன். என்னைத் தயவு செய்து ஒரு நடிகையாகப் பார்க்காதீர்கள். என்னை ஒரு பெண்ணாகப் பாருங்கள். என் வலிகளும், வருத்தங்களும் உங்களுக்கும் புரியும்" என்று கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.

More News

எல்லாவற்றையும் சுரண்டிவிட்டீர்கள். இதையாவது விட்டு வையுங்கள். கவிஞர் தாமரை வேண்டுகோள்

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகின்றது. குறிப்பாக இன்றும் நாளையும் மதிய நேரத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அரசு எச்சரிக்கும் அளவுக்கு வெயிலின் கொடுமை உள்ளது...

ஜெயலலிதா, கலைஞர் யாருடைய ஆட்சியும் சரியில்லை. ராஜ்கிரண்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் ஒரு குழப்பமான நிலையை சந்தித்து வருகின்றது. இந்த நிலையில் எந்த கருத்தையும் துணிச்சலாக பதிவு செய்யும் நடிகர் ராஜ்கிரண், தமிழக அரசியல் குறித்து பிரபல செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் ஒட்டுமொத்த ஆட்சியும் சரியில்லை என்று

சசிகலா குடும்பம் அதிமுகவில் இருக்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது. ஓபிஎஸ் திட்டவட்டம்

நேற்று மாலை முதல் இரண்டாக பிரிந்திருக்கும் அதிமுக மீண்டும் ஒன்றிணையவுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை மிக விரைவில் தொடங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி கொண்டு வருகிறது...

ரஜினிக்கு அரசியல் தெரியாது. சுப்பிரமணியன் சுவாமி

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த சில மாதங்களாகவே தமிழர்களுக்கு எதிராகவும், ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு எதிரகாவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்....

ஸ்பாட் எடிட்டிங் செய்ய பெல்கிரெட் செல்கிறார் 'விவேகம்' எடிட்டர். மே 1-ல் டீசர் உறுதி

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகிறது.