எஸ்.வி.சேகர் யாரென்றே தெரியாது.. 'ஜீன்ஸ்' படத்தில் நடித்தவரா? ஜோடியாக நடிக்கும் நடிகை பேட்டி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் எஸ். வி. சேகர் யார் என்று எனக்கு தெரியாது என்றும், அவரை எனது பாட்டிக்கு ரொம்ப பிடிக்கும் என்றும், அவர் ‘ஜீன்ஸ்’ படத்தில் நடித்தவரா என்றும் எஸ். வி. சேகருக்கு ஜோடியாக நடிக்கும் தொலைக்காட்சி சீரியல் நடிகை பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ஒரு சீரியலில் 76 வயது சேகருக்கு ஜோடியாக 26 வயது ஷோபனா என்பவர் நடிக்கும் நிலையில், இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியான நிலையில், எஸ். வி. சேகருக்கு ஜோடியாக நடித்தது குறித்து நடிகை சோபனா சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.
அதில், "எஸ். வி. சேகர் முதலில் யார் என்று எனக்கு தெரியாது. ‘ஜீன்ஸ்’ படத்தில் நடித்திருப்பார் என்பதை மட்டும் தான் நான் நினைவுபடுத்தி கொண்டேன். ஆனால், அதே நேரத்தில் என் பாட்டிக்கு அவரை மிகவும் பிடிக்குமாம். நான் என் பாட்டியையும் பார்த்ததில்லை. அதனால், அவர் குறித்து எனக்கு எந்த ஐடியாவும் இல்லை," என்று கூறியுள்ளார் நடிகை ஷோபனா.
நாடகம், சினிமா, அரசியல் என பிஸியாக இருந்த எஸ். வி. சேகர், சமீப காலமாக அரசியலில் தீவிர கவனம் செலுத்திய நிலையில், தற்போது அரசியலில் இருந்தும் ஒதுங்கி விட்டு மீண்டும் தொலைக்காட்சியில் நடிக்க வந்துள்ளார். இந்த தொலைக்காட்சி சீரியலில் அவர் மனைவியை இழந்த முதியவர் கேரக்டரில் நடிக்கிறார்.
மகன், மருமகள், பேரன் என பலர் இருந்தும், தனக்காக ஒரு துணை தேடிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த அவர், கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் இந்த சீரியலின் கதை என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments