நான் தினமும் கோமியம் குடிக்கின்றேன்: அக்சயகுமார் அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் தன்னுடைய ஆரோக்கியத்திற்காக தினந்தோறும் கோமியம் குடிப்பதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் ’மேன் வெர்ஸஸ் வைல்ட்’ என்ற நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்பட பலரும் பங்கேற்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் அக்சயகுமார் கலந்து கொண்டார். இதுகுறித்த டீசர் தற்போது வெளியாகியுள்ளதை அடுத்து இந்த டீசரை அக்சயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின்போது யானைச்சாணத்தில் பியர்ல் கிரில்ஸ் தனக்கு டீ போட்டு கொடுத்ததாக அக்சயகுமார் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஒருசில நடிகைகள், ‘யானை சாணத்தில் போடப்பட்ட டீயை குடிக்க எப்படி சம்மதித்தீர்கள் என்று கேட்டதற்கு ’பியர் கிரில்ஸ் யானை சாணத்தில் டீ போட்டு கொடுத்தது குறித்து நான் எந்தவித கவலையும் படவில்லை. ஏனெனில் நான் தினமும் ஆரோக்கியத்துக்காக மாட்டு கோமியத்தையே குடித்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே மாட்டுக் கோமியம் குடித்தால் உடலுக்கு நல்லது என பாஜகவினர் பலர் கூறி வரும் நிலையில் தற்போது அக்சயகுமார் அதே கருத்தை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

தன் உயிரைத் தியாகம் செய்து எஜமானைக் காப்பாற்றிய செல்லப்பிராணி… நெகிழ்ச்சி சம்பவம்!!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியைக் கடித்து தன்னுடைய எஜமானருக்கு எச்சரித்து செய்திருக்கிறது ஒரு நாய்.

மாட்டுக் கோமியத்தில் சானிடைசரா??? பரபரப்பு ஏற்படுத்தும் புதிய தகவல்!!!

மாட்டுக் கோமியம் மற்றும் சாணம் கிருமிநாசினி தன்மைக் கொண்டது என்ற நம்பிக்கை ஒருசிலரிடம் வலுவாக இருந்து வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் ஸ்பிரே!!! அசத்தும் புதிய கண்டுபிடிப்பு!!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையிலான களிம்பு ஒன்றை முன்னதாக அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி இருந்தனர்.

இவர்களால் தான் இந்த உலகத்திற்கே ஆபத்து: ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து எப்போது பேசினாலும் உடனே அனைவருக்கும் ஞாபகம் வரும் முதல் நபர் ஓவியா ஆகதான் இருக்கும். முதல் சீசனில் ஓவியா போட்டியாளராக கலந்து கொண்டாலும்

நிறைவேறாமல் போன வடிவேல் பாலாஜியின் கடைசி ஆசை: நண்பர் உருக்கம்

பிரபல சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று காலமான செய்தி சின்னத்திரை மற்றும் பெரியதிரை நட்சத்திரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில்