அஜித்தை மட்டும் மிஸ் செய்துவிட்டேன், ஆனால் அதுவும் விரைவில் நடக்கும்: ஷாருக்கான்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் ஷாருக்கான் தனது சென்னை பயணத்தின் போது அஜித்தை மட்டும் பார்க்கவில்லை என்றும் ஆனால் அதுவும் கூடிய சீக்கிரம் நடக்கும் என்றும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவான ’ஜவான்’ திரைப்படம் வரும் 7ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தனது சென்னை பயணம் குறித்த கேள்விக்கு ஷாருக்கான் ரசிகருக்கு பதில் அளித்துள்ளார்.
சென்னைக்கு சமீபத்தில் செய்த பயணத்தில் நான் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தேன், தளபதி விஜய்யையும் சந்தித்தேன், ஆனால் அஜித்தை மட்டும் என்னால் சந்திக்க முடியவில்லை. ஆனால் அதுவும் கூடிய சீக்கிரம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவை அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். ’
ஏற்கனவே ஷாருக்கான், அஜித்துடன் ’அசோகா’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அஜித், ஷாருக்கான் மீண்டும் இணைந்து நடிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
I met Rajni sir. I met Vijay Thalapathi. Missed meeting Ajith but will do soon. #Jawan https://t.co/c45cWo6rSJ
— Shah Rukh Khan (@iamsrk) September 3, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments