விஜய்யின் அரசியல் பிரவேச வதந்தி குறித்து எஸ்.ஏ.சி விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,March 29 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று ஒருபுறம் கடந்த பல ஆண்டுகளாக விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறம் இளையதளபதி விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற விவாதமும் சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியபோது, '10, 15 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யை அரசியலுக்கு கொண்டு வர விரும்பினேன். அதில் அதிக ஆர்வம் காட்டினேன். நடிகர் என்பதால் அரசியலில் புகழ் பெற முடியும், அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நினைத்தேன். காலப்போக்கில் அரசியல் சுத்தப்படுத்த முடியாத சாக்கடை என்பதை உணர்ந்தேன்.

தற்போது தமிழகத்தில் எப்படிப்பட்ட அரசியல் உள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். இதுபோன்ற அரசியலை பார்த்தது இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எனது மகன் அரசியலுக்கு வர நான் விருப்பப்படவில்லை. விஜய் அரசியலுக்கு வரமாட்டார்' என்று கூறியிருந்தார்.

இந்த பேட்டி வெளியானதில் இருந்து விஜய் அரசியலுக்கு வருவதை எஸ்.ஏ.சி தடுத்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எஸ்.ஏ.சி தற்போது விளக்கம் அளித்துள்ளார் அந்த விளக்கத்தில், 'விஜய் அரசியலில் நுழைய மாட்டார் என நான் எப்போதும் கூறியதில்லை. அவரை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என முதலில் எனக்கு ஆசை இருந்தது. ஆனால் தற்போது அரசியல் ஒரு சாக்கடையாகிப் போய்விட்டது. எனவேதான் எனது ஆசையை நான் ஒத்தி வைத்திருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. இந்த விஷயத்தில் விஜய்யின் முடிவு என்னவாக இருக்கும் என்பது எனக்கு தெரியாது' என்று கூறியுள்ளார்.

More News

கமல் நண்பரின் இணையதளம் திடீர் முடக்கம். காரணம் என்ன?

கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவரும் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளம் திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

ஜெய்-அஞ்சலி காதல் திருமணம் எப்போது?

தமிழ் திரையுலகில் அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பிரசன்னா-சினேகா நட்சத்திர ஜோடி போல் இன்னொரு நட்சத்திர ஜோடியான ஜெய்-அஞ்சலி உருவாகவுள்ளதாக கடந்த சில நாட்களாக வதந்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த வதந்தியை இரு தரப்பினர்களும் மறுக்காததால் இதில் உண்மை இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது...

இலங்கை தமிழர்களுக்கு ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் தமிழக அரசியல்வாதிகள் ஒருசிலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விழாவில் கலந்து கொள்ளும் திட்டத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தார்...

விஜய்சேதுபதி-கே.வி.ஆனந்த் இணைந்த 'கவண்'. திரை முன்னோட்டம்

கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கே.வி.ஆனந்த் அவர்களும், வருடத்தில் மிக அதிக படங்களை ரிலீஸ் செய்யும் முன்னனி நடிகர்களில் ஒருவரான விஜய்சேதுபதியும் முதல்முறையாக இணைந்த 'கவண்' திரைப்படம் வரும் வெள்ளியன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீஸ் ஆகவுள்ளது

பவன் கல்யாண் அடுத்த படத்தில் குவியும் கோலிவுட் நட்சத்திரங்கள்

பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடித்த 'கட்டமராயுடு' திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வசூலை பெற்றது.