close
Choose your channels

'பொன்னியின் செல்வன் 2' படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளேன்.. பிரபல பாடகியின் அறிவிப்பால் ரசிகர்கள் குஷி..!

Saturday, March 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

முதல் கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், முதல் பாகத்தின் இசை வெளியீடு போலவே இரண்டாவது பாகத்தின் இசை வெளியிடும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளேன் என பிரபல பாடகி சித்ரா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் பாடிய பாடலை கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தில் இடம்பெற்ற பாடல்களில் சித்ராவின் குரல் இல்லை என்றாலும் இரண்டாவது பாகத்தில் அவரது குரலில் ஒரு பாடல் உள்ளது என்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சமீபத்தில் வெளியான ’வாரிசு’ திரைப்படத்தில் சித்ரா பாடிய பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில் பொன்னியின் செல்வன் பாடலும் அதே போல் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.