10 சதவீதம்தான் சொல்லி இருக்கின்றேன். ஓபிஎஸ். மீதியை எப்போது சொல்வார்?

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்றிரவு சென்னை மெரீனாவில் மீண்டும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அவர் எழுப்பிய புரட்சியால் தமிழகமே அதிர்ந்து போயுள்ளது. ஒரு முதல்வரை மிரட்டும் அளவுக்கு துணிச்சல் எப்படி வந்தது? என்று அதிர்ச்சியுடன் மக்களும், அதிமுகவின் உண்மையான தொண்டர்களும் கூறி வருகின்றனர். மேலும் தங்கள் முழு ஆதரவை ஓபிஎஸ் அவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வழியாக பேட்டி அளித்த ஓபிஎஸ் அவர்கள் 'நான் கூறியது 10 சதவீதம்தான். மீதியை அரசியல் நாகரீகம் கருதி சொல்லவில்லை' என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

அதிமுக கழகத்தில் உள்ள பிரச்னைகளில் வெறும் 10 சதவீதம் தான் தற்போது கூறியுள்ளேன். எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அம்மாவின் நினைவிடத்தில் பேட்டி கொடுக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆளாக்கப்பட்டேன்.

சாதரண தொண்டனான என்னை மாண்புமிகு அம்மா அவர்கள் உயர்த்தினார். அந்த விசுவாசத்தால் என்னை முதலமைச்சராக்கிய பொழுதும் கட்சிக்கும் ஆட்சிக்கும் சிறிதளவு பங்கம் கூட அம்மாவின் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதால் சரியாக செய்ய வேண்டும் என பார்த்து பார்த்து செய்தேன்.

நான் முதல்வராக இருக்கும் போது சில அமைச்சர்கள் கழக பொதுச் செயலாளரே முதல்வராக வேண்டும் என்ற கருத்து தெரிவித்தனர். அது என் மனதை மிகவும் பாதிக்க செய்தது. சக அமைச்சர்களே முதல்வராக இருந்த என்னை அசிங்கப்படுத்தினர். இது போன்ற சூழல் அம்மா இருந்திருந்தால் ஏற்பட்டிருக்காது. எனக்கு கிடைத்த நல்ல பெயரை கழகத்தின் தலைமை விரும்பவில்லை. இருப்பினும் அமைச்சர்கள் மீது அதிருப்தி காட்டாமல் பணியை மட்டும் செய்தேன்.

முதலமைச்சர் பதவி வேண்டாம் என கூறியபோதும், அந்த பொறுப்பை என்னிடம் கொடுத்து, நான் சாந்தித்த அவமானங்கள் அதிகம். வேதனையுடன் இந்த 60 நாட்களை கழித்தேன். அதற்கு பரிகாரம் தேடுவதற்காகவே ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றேன்.

என் விசுவாசத்தை பார்த்து தான், நான் கேட்காமலே எனக்கு ஜெயலலிதா பதவியை கொடுத்தவர். அவர் கொடுத்த பதவிக்கு பங்கம் வராமல் சரியாக செய்து வந்தேன். அம்மாவின் ஆன்மா என்றும் எனக்கு துணையாக இருக்கும்' என்று கூறினார்.

More News

மக்கள் கொடுங்கோலுக்கு எதிராக என்றுமே துணை நிற்பார்கள். கமல்ஹாசன்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கிளப்பிய அரசியல் புயல் தமிழக அரசியலை சுழன்று அடித்து வருகிறது. இந்த புயலில் வீழ்பவர் யார்? எழுபவர் யார்? என்ற கேள்விக்கு இன்று விடை தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

நான் அம்மாவின் உண்மையான விசுவாசி. என்னை யாரும் நீக்க முடியாது. ஓபிஎஸ்

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு  நடைபெற உள்ளதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில், பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறாது...

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம். சசிகலா நடவடிக்கை

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று இரவு தனது உள்ளக்குமுறல்களை ஜெயலலிதா நினைவிடத்தில் எழுப்பியது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கட்சியின் தலைமையால் மிரட்டப்பட்டு நிர்ப்பந்தத்தின் காரணமாகவே பதவியை ராஜினாமா செய்தேன் என்று அவர் கூறியது தமிழக மக்களை மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது...

ஓபிஎஸ் அதிரடியை தொடர்ந்து அமைச்சர்களுடன் சசிகலா அவசர ஆலோசனை

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சற்று முன்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தான் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மக்களும் தொண்டர்களும் விரும்பும் ஒருவர்தான் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் வரவேண்டும் என்பதற்காக தன்னந்தனியாக போராடுவேன் என்று அதிரடியாக பேட்டி அளித்தார்...

ஓபிஎஸ் பேட்டியை தொடர்ந்து ஆளுனர் அலுவலகத்தின் முக்கிய தகவல்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் அதிரடி பேட்டியை அடுத்து ஒருபக்கம் சசிகலா மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் தமிழக பொறுப்பு கவர்னராக இருக்கும் வித்யாசாகர் ராவ் அவர்களின் அலுவலகத்தில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வந்துள்ளது...