பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை திடீர் ஆய்வு!

  • IndiaGlitz, [Wednesday,September 15 2021]

பாலிவுட் நடிகரான சோனு சூட் கொரோனா காலத்தில் மக்களின் ஆஸ்தான நாயகனாக மாறியிருந்தார். தற்போது மும்பையில் உள்ள நடிகர் சோனு சூட்டிற்குச் சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ஆய்வு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா ஊரடங்கின்போது இந்தியாவில் உள்ள பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்துவந்தனர். அவர்களை தனது சொந்த செலவில் நடிகர் சோனு சூட் பத்திரமாக அனுப்பி வைத்தார். மேலும் கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்குத் தேவையான பல்வேறு உதவிகளை தேடித்தேடிப் போய் செய்துவந்தார். இதனால் மக்களின் ஆஸ்தான நாயகனாக மாறியதோடு சில இடங்களில் இவருக்கு பொதுமக்கள் பேனர் வைக்கும் அளவிற்கு இவரது செல்வாக்கும் உயர்ந்தது.

அந்த வகையில் டெல்லி அரசு, பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சிகளுக்கு விளம்பரத்தூதராக நடிகர் சோனு சூட்டை நியமித்தது. இதனால் நடிகர் சோனு சூட் ஆம் ஆத்மி கட்சியில் இணையப்போகிறார் என்பது போன்ற தகவல்கள் கூட வெளிவந்தன. ஆனால் இதுபோன்ற தகவலை உறுதிப்படுத்தாத நடிகர் சோனு சூட் தொடர்ந்து பொதுமக்களுக்கு தனது சொத்துகளை அடமானம் வைத்து உதவி செய்துவந்தார்.

தற்போது மும்பையில் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் கடும் பரபரப்பை கிளப்பி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'நாய்சேகர்' டைட்டில் கிடைக்காததால் வடிவேலு படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

நீண்ட இடைவேளைக்கு பின்னர் வைகைப்புயல் வடிவேலு நடிக்க வந்துள்ளார் என்பதும், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், சுராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படத்தில் அவர் முக்கிய கேரக்டரில்

'வலிமை' டீசர் ரிலீஸ் குறித்த ஹேஷ்டேக் டிரெண்டிங்!

தல அஜித் நடித்து முடித்துள்ள 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

ஒற்றைக்காலில் நின்று கொண்டு வொர்க்-அவுட் செய்யும் லெஜண்ட் சரவணன் பட நாயகி!

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் அவர்கள் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படம் தமிழ் தெலுங்கு உள்பட ஐந்து

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை அடுத்து அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

நான் கந்துவட்டி கேட்டேனா? சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை விளக்கம்

பாஜகவில் சமீபத்தில் இணைந்த தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஜெயலட்சுமி மீது கந்துவட்டி புகார் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.