close
Choose your channels

வடிவேல் பாலாஜியை அடுத்த படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தேன்: பிரபல இயக்குனர் 

Friday, September 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று திடீரென உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி சின்னத்திரை ரசிகர்களை மட்டுமின்றி பெரிய திரை நட்சத்திரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், பிரசன்னா, பாலசரவணன், மைனா நந்தினி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் அவருடைய மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

மேலும் வடிவேல் பாலாஜி உடனான தங்களது மலரும் நினைவுகளையும் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் மைனா நந்தினி உள்ளிட்ட பிரபலங்கள் பகிர்ந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தொலைக்காட்சியில் இருக்கும்போதே வடிவேல் பாலாஜி உடன் நெருக்கமான நட்பை கொண்டிருந்த இயக்குனர் நெல்சன், அவருடன் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நெல்சன் இயக்கிய முதல் திரைப்படமான ’கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் வடிவேல் பாலாஜியை நடிக்க வைத்திருந்தார் என்பது தெரிந்ததே.

தற்போது நெல்சன் இயக்கி வரும் ’டாக்டர்’ படத்தில் வடிவேலு பாலாஜிக்கு உரிய கேரக்டர் இல்லை என்றாலும் எனது அடுத்த படத்தில் அவருக்கு முக்கிய கேரக்டரை ஒதுக்கி வைத்து இருந்தேன் என்றும், அவரை அந்த படத்தில் பயன்படுத்த நான் திட்டமிட்டிருந்த நிலையில் அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று பேட்டி ஒன்றில் இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.