பட்டப்படிப்பு முடித்த கையோட பாஸ்போட்டையும் தரோம்… மகிழ்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மாநில முதல்வர்!!!

  • IndiaGlitz, [Monday,July 13 2020]

 

ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் விதத்தில் பெண்கள் பட்டப்படிப்பை முடிக்கும் போது அவர்களுக்கு பாஸ்போட்டையும் சேர்த்து வழங்க ஏற்பாடு செய்வோம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். பெண்கள் கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும், படிப்பு முடிந்தவுடன் வெறுமனே இருந்து விடக்கூடாது, அவர்கள் வெளிநாடுகளுக்கும் சென்று பணியாற்ற வேண்டும். இதற்கு கல்லூரி படிப்பை முடிக்கும்போதே அவர்களுக்கு பாஸ்போட் கிடைக்குமாறு வழிவகை செய்யப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

கல்லூரி மாணவர்கள் வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நேற்று சண்டிகரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் மனோகர் லால் கட்டார், மாணவர்கள் வாகனங்களில் செல்லும்போது முறையாக ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும். சாலை விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும். மேலும் பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அவர்கள் படித்த முடித்து விட்டு வெளிநாடுகளுக்கும் சென்று பணியாற்ற வேண்டும்.எனவே கல்லூரி படிப்பை முடிக்கும் பெண்களுக்கு பட்டப்படிப்புடன் சேர்த்து பாஸ்போட்டையும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்து இருக்கிறார். முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு ஹரியாணா மாநிலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சீனாவுக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியும்… திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்ட பெண் விஞ்ஞானி!!!

ஹாங்காங் வைரலாஜி துறையில் பணியாற்றும் நோய் எதிர்ப்பு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் லி மெ யான் தற்போது உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் விவேக் மைத்துனருக்கு கொரோனா: அரசு மருத்துவமனையில் அனுமதி!

கொரோனா வைரஸால் பல திரையுலக பிரமுகர்கள் பாதிக்கப்பட்டு வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். நேற்று அமிதாப்பச்சன் குடும்பத்திலுள்ள நால்வருக்கும்

அமிதாப், அபிஷேக் புகைப்படத்தை பதிவு செய்த ஹாலிவுட் பிரபலம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராதித்யா ஆகிய நால்வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட

சினிமாவுக்கு பதில் நிஜவாழ்க்கையில் நடக்கின்றது: நடிகை டாப்ஸி

குஜராத் மாநிலத்தின் அமைச்சர் ஒருவர் மகனின் நண்பர்களை பெண் போலீஸ் ஒருவர் கைது செய்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை டாப்சி 'நாங்கள் சினிமா தயாரிப்பதை நிறுத்தி விட்டோம்.

யார் சிறந்த கேப்டன் கங்குலியா? டோனியா? சுவாரசியம் நிறைந்த கருத்துக் கணிப்பு!!!

ஐபில் கிரிக்கெட் போட்டி காலவரையறையின்றி ஒத்து வைக்கப் பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களைத்