close
Choose your channels

ரஜினி கட்சிக்கு செல்கிறாரா சினேகன்? அவரே அளித்த பதில்

Wednesday, October 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், அக்கட்சியின் சார்பில் கடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டவருமான கவிஞர் சினேகன், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அவரது கட்சிக்கு செல்ல மாட்டேன் என்று பதிலளித்துள்ளார்.

நேற்று சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட சினேகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 'ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அவரது கட்சியில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த போது, '"நான் எப்படி ரஜினிகாந்த் ஆரம்பிக்கும் கட்சிக்குச் செல்வேன்? எனக்குப் பிடித்த தலைவராக கமல்ஹாசன் இருக்கிறார். அவரை நான் ஒரு ஆண் தேவதையாக நினைக்கிறேன். அவருடைய கட்சியில் வேட்பாளராக மக்களவைத் தேர்தலைச் சந்தித்திருக்கிறேன். அவருடைய கட்சியில் கடைநிலை உறுப்பினராக அவர் பின்னால் இருப்பேன். யாருக்காகவும் அவரை விட்டுச் செல்லமாட்டேன்" என்றூ கூறினார்.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பது எப்போது? என்பதே இன்னும் தெரியாத நிலையில் அவரது கட்சியில் மாற்றுக்கட்சியில் உள்ள பலர் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.