ரஜினியின் அரசியல் பேச்சு: மு.க.ஸ்டாலின், திருமாவளவன், தமிழிசை கருத்து

  • IndiaGlitz, [Tuesday,May 16 2017]

சூப்பர் ஸ்டார் கடந்த பல வருடங்களாக அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்து வந்தாலும் நேற்று அவர் ரசிகர்களிடையே கூறிய கருத்து சற்று வித்தியாசமாக இருந்தது. இதுவரை அரசியலுக்கு வருவதை அவர் நேரடியாக அறிவிக்காத நிலையில், தற்போது அரசியலுக்கு வந்தால் எப்படி நடந்து கொள்வேன், யாரை ஒதுக்கி வைப்பேன் என்றெல்லாம் கூறியதை அவரது ரசிகர்களும், அரசியல் விமர்சகர்களும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து சில அரசியல்வாதிகள் கூறிய கருத்துக்களை பார்ப்போம்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் இஷ்டம். ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால், அதனை வரவேற்பேன்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவர் விருப்பம். பாஜக அவரை வைத்து தமிழகத்தில் காலூன்ற துடிக்கின்றது. அவர் அரசியலுக்கு வந்தால் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அதை வரவேற்கும்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்: 'நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களிடம், ஊழலை எதிர்ப்பதாக குறிப்பிட்டது தான் பாஜகவின் கருத்து. அவரது பேச்சின்மூலம் அரசியலுக்கு வருவார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது. அவர் அரசியலுக்கு வரும் போது நல்ல கட்டமைப்போடும், நல்ல மனிதர்களுடன் வந்தால் அரசியலில் வெற்றி பெறுவார் என்பதே என் கருத்து' என்று கூறினார்.

More News

7 வருட 'எந்திரன்' சாதனையை முறியடித்த 'பாகுபலி 2'

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ஒவ்வொரு சாதனையாக தகர்த்து வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இதுவரை தமிழகத்தில் மிக அதிகமாக வசூல் செய்த படம் என கடந்த 7 வருடங்களாக சாதனையில் இருந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன்' திரைப்படம்...

பிரபல கோலிவுட் இசையமைப்பாளர் பாலிவுட்டில் அறிமுகம்

கோலிவுட் திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் எஸ்.தமன். தில்லாலங்கடி, காஞ்சனா, மெளனகுரு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, சேட்டை, வாலு, சமீபத்தில் வெளியான 'சிவலிங்கா' உள்பட பல தமிழ் திரைப்படங்களுக்கும், ஏராளமான தெலுங்கு படங்களூக்கும் இவர் இசையமைத்துள்ளார்...

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு

கடந்த சில மாதங்களாகவே அரசியல் தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர்களின் சோதனை உள்பட பல சோதனைகள் அவ்வப்போது நடந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம்...

ரஜினிகாந்த் தோல்வி அடைவார்: சுப்பிரமணியன் சுவாமியின் கடுமையான விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றைய ரசிகர்களின் சந்திப்பின்போது, 'கடவுள் இப்போது என்னை நடிகனாக பயன்படுத்தி வருகிறார். நாளை அவர் என்னை அரசியல்வாதியாக பயன்படுத்தினால் உண்மையாக செயல்படுவேன்' என்று தெரிவித்திருந்தார். இந்த பேச்சு அவர் அரசியலுக்கு வருவதை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்த

முத்தரப்பு பேச்சுவார்த்தை திடீர் ஒத்திவைப்பு. பஸ் ஸ்டிரைக் தொடருமா?

ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.