close
Choose your channels

விஜய் படத்தில் இசையமைப்பாளர் எஸ்.தமன்: ரசிகர்கள் குஷி!

Friday, March 5, 2021 • தமிழ் Comments

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் அனிருத் இசை அமைப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் படத்தில் பணிபுரிவேன் என பிரபல தமிழ் தெலுங்கு திரையுலகின் இசையமைப்பாளர் எஸ்.தமன் கூறியுள்ளது ரசிகர்களுக்கு குஷியாகியுள்ளது.

ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூகவலைதளத்தில் பதிலளித்த இசையமைப்பாளர் தமன், தளபதி விஜய் படத்தில் நீங்கள் விரைவில் பணிபுரிவீர்களா? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு கண்டிப்பாக விஜய் படத்தில் விரைவில் பணிபுரிவேன்’ என்று கூறியுள்ளார். அதேபோல் விஜய் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது ’யூத்’ படத்தில் இடம்பெற்ற 'ஆல்தோட்ட பூபதி என்ற பாடல்தான் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் எனக்கு சூர்யாவை மிகவும் பிடிக்கும் என்றும் அவர் மிகுந்த மனிதநேயம் உள்ளவர் என்றும் குறிப்பாக அவரது அகரம் பவுண்டேஷன் செயல்படும் விதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது என்றும் அவர் மற்றொரு கேள்விக்கான பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அஜீத் நடிக்கும் படத்தில் பணிபுரிய மிகவும் ஆவலுடன் காத்து இருப்பதாகவும், அதே போல் சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்க தனக்கு ஆசை என்றும் கூறியுள்ளார். ஏஆர் ரகுமான் தனது விருப்பத்துக்குரிய இசையமைப்பாளர் என்றும் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி என்றும் குறிப்பிட்டுள்ளார். தமனின் இந்த தகவல்கள் சமூகவலைதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Get Breaking News Alerts From IndiaGlitz