சச்சின் டெண்டுல்கரின் பெயரை சொல்ல முடியாமல் திணறிய டிரம்ப்.. கிண்டலடித்து டிவீட் போட்ட ஐசிசி..!

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உச்சரித்ததை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திங்களன்று வேடிக்கையாக பதிவிட்டது. நமஸ்தே டிரம்ப் நிகழ்வின் ஒரு பகுதியாக மோடேரா மைதானத்தில் பேசிய டிரம்ப், இந்திய கிரிக்கெட் லெஜண்ட்டுகளான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் குறித்து பேசினார். வருகை தந்த டிரம்ப், சச்சின் பெயரை, “சூ-சின் டெண்டுல்கர் (சச்சின் டெண்டுல்கர்) என்று உச்சரித்தார்.

“பெரிய கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை அனைவரையும் உற்சாகப்படுத்தும் நாடு இது,” என்று டிரம்ப் நிகழ்ச்சியில் கூறினார். டிரம்ப், இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை குறிப்பிட்டதும், மோடேரா மைதானத்தில் இருந்த கூட்டம் சந்தோஷத்தில் கோஷமிடத் தொடங்கினர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை சொன்னவுடன் புன்னகைத்தார். ஐசிசி தன்னுடைய ட்விட்டர் பக்கம் ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில் சச்சின் பெயரை சூ-சின் டெண்டுல்கர் அதிகாரப்பூர்வ பதிவு புத்தகத்தில் மாற்றுவதைக் காணலாம்.

ஐசிசி இந்த வீடியோவுக்கு, “சச், சுச், சாட்ச், சட்ச், சூச்- யாருகாவது தெரியுமா?” என்று தலைப்பிட்டது. கடந்த செப்டம்பரில் பிரதமரின் ஹூஸ்டன் பயணத்தின் போது நரேந்திர மோடி மற்றும் டிரம்ப் உரையாற்றிய “ஹவுடி மோடி” திட்டத்தின் வரிகளை அடிப்படையாகக் கொண்டது நமஸ்தே டிரம்ப் நிகழ்வு.

இந்நிகழ்ச்சிக்காக சுமார் ஒரு லட்சம் பேர் கூடியிருந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஆகியோரும் மைதானத்தில் கலந்து கொண்டனர்.அமெரிக்க அதிபர் தனது மனைவி மெலனியா மற்றும் ஒரு அமைச்சர் தூதுக்குழுவுடன் அகமதாபாத்திற்கு வந்தார். அதில் அவருடைய மகள் இவான்கா மற்றும் டிரம்பின் மூத்த ஆலோசகர்களாக பணியாற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

More News

'நெற்றிக்கண்' பிரச்சனை: விசுவை சமாதானம் செய்த தனுஷ்!

கடந்த சில நாட்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1981-ஆம் ஆண்டு வெளியான 'நெற்றிக்கண்' திரைப்படத்தின் ரீமேக்கில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் மேனகா கேரக்டரில்

மூன்றாம் முறையாக ரிலீஸ் தேதியை அறிவித்த 'பொன்மாணிக்கவேல்' படக்குழு

பிரபுதேவா முதன்முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்த திரைப்படம் 'பொன்மாணிக்கவேல்'. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி சில மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது.

3 நிமிடங்களில் 30 தோப்புக்கரணம் போட்டால் இலவச டிக்கெட்..!

உட்கார்ந்து எழும் இயந்திரத்தில் 3 நிமிடங்களில் 30 முறை தோப்புக்கரணம் போடுவதுபோல் அமர்ந்து எழுந்தால் இலவசமாக டிக்கெட் பெறலாம்.

கவுதம் மேனன் பிறந்த நாளில் ஒரு ரொமான்ஸ் அறிவிப்பு

பிரபல இயக்குனர் கவுதம் மேனனின் பிறந்த நாளை இன்று தமிழ் திரையுலகமே கொண்டாடி வருகிறது. அவருக்கு திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை

இந்த பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம்: சமந்தா குறித்து அதிதிராவ் ஹைத்ரி

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்தப் படம் 'ஜானு' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு