close
Choose your channels

லிங்குசாமிக்கு 2வது முறையாக கைகொடுத்த பென் மூவீஸ்

Thursday, December 31, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் லிங்குசாமி தயாரித்திருந்தார். இந்த படம் கடந்த செப்டம்பர் மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய நிலையில் ஃபைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது.

கடந்த 4ஆம் தேதி உறுதியாக ரஜினிமுருகன்' படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் ஆகாததால் மீண்டும் பிரச்சனைக்குள்ளான ரஜினிமுருகன்' படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்த நிலையில் பாலிவுட்டின் பிரபல நிறுவனமான 'பென் மூவீஸ்' ரஜினிமுருகனின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து ரிலீஸ் செய்ய முன்வந்தது. தற்போது இந்த படம் வரும் பொங்கல் திருநாளில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் ரஜினிமுருகன்' போலவே லிங்குசாமி தயாரித்த 'இடம் பொருள் ஏவல்' படமும் ஃபைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்த படத்தையும் பென் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய தற்போது முன்வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பென் மூவீஸ் நிறுவனத்தின் பெயருடன் 'இடம் பொருள் ஏவல்' படத்தின் விளம்பரம் சற்று முன்னர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.