மதுரையில் 'விடாமுயற்சி' படம் பார்த்த 'இட்லி கடை' நடிகர்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பல திரையுலக பிரபலங்கள் திரையரங்கில் பார்த்தார்கள் என்பதும், இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனதையும் ஏற்கனவே பார்த்தோம்.
குறிப்பாக, சென்னையில் உள்ள திரையரங்குகளில் திரிஷா, ரெஜினா, ரம்யா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தை பார்த்தார்கள். அதேபோல், இசையமைப்பாளர் அனிருத் உட்பட பல திரையுலக பிரபலங்கள் படம் பார்த்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தனுஷ் நடித்து இயக்கி வரும் ’இட்லி கடை’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து வரும் அருண் விஜய், நேற்று மதுரையில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை பார்த்தார். மதுரை அருகே உள்ள தேனியில் ’இட்லி கடை’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு முடிந்தவுடன், அவர் மதுரையில் உள்ள திரையரங்கில் ‘விடாமுயற்சி’ படத்தை பார்த்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே அஜித் உடன் ’என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்த பின்னரே, அருண் விஜய்க்கு திரையுலகில் ஒரு திருப்புமுனை கிடைத்தது. இந்நிலையில், தற்போது அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படத்தை பார்க்க வந்ததை அடுத்து, அஜித் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Victor @arunvijayno1 🔥
— Rinku Gupta (@RinkuGupta2012) February 7, 2025
watching #VidaaMuyarchi at Madurai,Theni during the break time of #IdlyKadai shoot 💥💥💥💥 pic.twitter.com/r6tYdHk5YV
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments