close
Choose your channels

ஹிந்தியிலும் அடுத்தடுத்த பாகங்கள்? 'லட்சுமி பாம்' தயாரிப்பாளர் தகவல்!

Sunday, October 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய நான்கு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது காஞ்சனா திரைப்படம் ’லட்சுமி பாம்’ என்ற பெயரில் இந்தியில் தயாராகி உள்ளது என்பதும், இந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் துஷார் கபூர் பேட்டி ஒன்றில் கூறியபோது ’லட்சுமி பாம்’ படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, தமிழ் போலவே இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். ’லட்சுமி பாம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றால் அடுத்தடுத்த பாகங்களில் தயாரிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனவே தமிழ் போலவே காஞ்சனா திரைப்படம் ஹிந்தியிலும் அடுத்தடுத்த பாகங்கள் தயாராகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

அக்சய்குமார், கைரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள ’லட்சுமி பாம்’ திரைப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.