close
Choose your channels

பேத்திக்கு இசையமைக்க கற்று கொடுக்கும் இசைஞானி: பிறந்த நாளில் வைரலாகும் வீடியோ!

Wednesday, June 2, 2021 • தமிழ் Comments

இசைஞானி இளையராஜா இன்று தனது 77வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்தது. கமல்ஹாசன் உள்பட பல பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பழைய வீடியோவான இந்த வீடியோவில் யுவன்சங்கர்ராஜாவின் மகளுக்கு இசைஞானி பியானோவில் இசை அமைக்க கற்றுக் கொடுப்பது போன்ற காட்சிகள் உள்ளன. பேத்திக்கு இசை அமைக்க இசைஞானி கற்று கொடுக்கும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி உள்ள நிலையில் இந்த வீடியோவில் கேப்ஷனாக தந்தை தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓரிரு வருடங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில் யுவன் சங்கர் ராஜாவின் மகள் தனது தாத்தாவுடன் சேர்ந்து பியானா வாசிக்கும் காட்சிகள் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz