close
Choose your channels

இளையராஜா கம்போஸ் செய்த ஆங்கில பாடல்: எந்த படத்திற்கு தெரியுமா?

Wednesday, June 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜா மொழிகளை கடந்த ஒரு இசைக்கலைஞர் என்பதும், இசைக்கு மொழி தேவையில்லை என்று அவர் அடிக்கடி கூறுவதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழ்ப்படம் ஒன்றுக்கு ஆங்கில பாடலை கம்போஸ் செய்து இசைஞானி அசத்தியுள்ளார்.

துரை பாண்டியன் என்பவர் இயக்கி வரும் திரைப்படம் 'முன்பதிவு'. இந்த படத்தில் கிராமத்து இளைஞர்கள் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் நாயகி கலந்து கொள்வதாக ஒரு காட்சி. நாயகியை பார்த்ததும் இளைஞர்கள் திடீரென ஆங்கில பாடல் பாடி நாயகியின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப முயற்சிக்கின்றனர். இந்த காட்சிக்காக இந்த படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா ஒரு ஆங்கில பாடலை கம்போஸ் செய்துள்ளார். இந்த ஆங்கில பாடலை டாக்டர் செளமோ கோஷல் என்பவர் எழுதியுள்ளார்.

கிராமத்து இளைஞரகள் பர்கர் சாப்பிட ஆசைப்படுவதும், நகரத்து இளைஞர்கள் கிராமிய வாழ்க்கை வாழ ஆசைப்படுவதையும் இந்த பாடல் உணர்த்துகிறதாம். முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வரும் இந்த படத்தில் இயக்குனர் கவுதமன் மகன் தமிழ் ஒரு முக்கிய வேடத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos