இளையராஜா கம்போஸ் செய்த ஆங்கில பாடல்: எந்த படத்திற்கு தெரியுமா?

இசைஞானி இளையராஜா மொழிகளை கடந்த ஒரு இசைக்கலைஞர் என்பதும், இசைக்கு மொழி தேவையில்லை என்று அவர் அடிக்கடி கூறுவதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழ்ப்படம் ஒன்றுக்கு ஆங்கில பாடலை கம்போஸ் செய்து இசைஞானி அசத்தியுள்ளார்.

துரை பாண்டியன் என்பவர் இயக்கி வரும் திரைப்படம் 'முன்பதிவு'. இந்த படத்தில் கிராமத்து இளைஞர்கள் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் நாயகி கலந்து கொள்வதாக ஒரு காட்சி. நாயகியை பார்த்ததும் இளைஞர்கள் திடீரென ஆங்கில பாடல் பாடி நாயகியின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப முயற்சிக்கின்றனர். இந்த காட்சிக்காக இந்த படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா ஒரு ஆங்கில பாடலை கம்போஸ் செய்துள்ளார். இந்த ஆங்கில பாடலை டாக்டர் செளமோ கோஷல் என்பவர் எழுதியுள்ளார்.

கிராமத்து இளைஞரகள் பர்கர் சாப்பிட ஆசைப்படுவதும், நகரத்து இளைஞர்கள் கிராமிய வாழ்க்கை வாழ ஆசைப்படுவதையும் இந்த பாடல் உணர்த்துகிறதாம். முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வரும் இந்த படத்தில் இயக்குனர் கவுதமன் மகன் தமிழ் ஒரு முக்கிய வேடத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

More News

ஹாலிவுட் படத்தில் இணைந்த நடிகர் சித்தார்த்!

தமிழ் நட்சத்திரங்கள் ஹாலிவுட்டையும் கலக்கி வரும் நிலையில் நடிகர் சித்தார்த் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் பணிபுரிந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

மிரா வருகையால் களைகட்டும் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்கள் ஆகிவிட்டபோதிலும் என்னடா இன்னும் குருப் ஃபார்ம் ஆகவில்லையே என்று அனைவரும் நினைத்த நிலையில்

சிந்துபாத் ரிலீஸ் தேதியை உறுதி செய்த விஜய்சேதுபதி!

விஜய்சேதுபதி நடித்த 'சிந்துபாத்' திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் கடைசி நேர பஞ்சாயத்து காரணமாக குறித்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை.

'பாகுபலி' நடிகருடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அப்துல்கலாம் கனவை நனவாக்க முயற்சித்த மாணவிக்கு விஜய்சேதுபதி உதவி!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சினிமாத்துறையினர்களுக்கு மட்டுமின்றி சினிமாவையும் தாண்டி பலருக்கு உதவி செய்துள்ளார் என்பது அவ்வப்போது வெளிவரும் செய்திகளில் இருந்து பார்த்து வருகிறோம்.