வைகோவுடன் இணைகிறாரா இளையராஜா?

  • IndiaGlitz, [Tuesday,October 17 2017]

இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை என்ற பெரும்புகழை பெற்ற ராணி வேலுநாச்சியாரின் நாடகம் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த நாடகத்தை நேரில் பார்த்து ரசித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்த நாடகத்தை திரைப்படமாக தானே தயாரிக்கவிருப்பதாக அறிவித்தார். 

ஸ்ரீராம் சர்மா இயக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் வேலுநாச்சியார் கேரக்டர் உள்பட பிற கேரக்டர்களில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. வேலுநாச்சியாரின் கேரக்டரில் நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இளையராஜாவின் தீவிர ரசிகரான வைகோ, வரலாற்று சிறப்புமிக்க இந்த படத்தில் இசைஞானி இசையமைக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் இந்த படத்தில் இசைஞானி ஒரு இசை ராஜாங்கத்தையே நடத்திவிடுவார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

More News

மெர்சல்' படத்தின் சரியான ரன்னிங் டைம்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இதுவரை எந்த திரைப்படமும் சந்திக்காத பல தடைகளை கடந்து நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

சூர்யா-விக்னேஷ்சிவன் கூட்டத்தில் இணைந்த 'கபாலி' நடிகர்

சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் 'சொடக்கு' பாடல் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.

தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு அதிகாரபூர்வ சென்சார் சான்றிதழ்

கடந்த இரண்டு நாட்களாக தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு சென்சார் கிடைக்குமா? கிடைக்காதா? என்று படக்குழுவினர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கு இருந்த டென்ஷன் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கீர்த்திசுரேஷ்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷூக்கு IndiaGlitz தனது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

என் ரசிகர்களை நண்பர்கள் என்று கூறுவதில் எனக்கு பெருமை: விஜய்

தளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா மற்றும் தெலுங்கு மாநிலங்கள் உள்பட இந்தியா முழுவதிலும் ஏன் உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்