'குட் பேட் அக்லி' தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன்? இளையராஜா வழக்கறிஞர் விளக்கம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா கம்போஸ் செய்த மூன்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜாவின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதற்கு அந்த வழக்கறிஞர் கொடுத்த விளக்கத்தின்படி இசைஞானி இளையராஜாவிடம் அந்த பாடல்களை பயன்படுத்த முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும், அனுமதி பெறாமல் இந்த படத்தில் பாடல்களை பயன்படுத்தி இருப்பதால் அவர்கள் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நமது இந்திய காப்புரிமை சட்டத்தில் காப்புரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற நோக்கத்திற்காக தெளிவாக சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சட்டங்களின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இன்னொரு முக்கிய விஷயம் என்னவெனில் அந்த பாடல்களை அப்படியே பயன்படுத்தி இருந்தாலும் பரவாயில்லை, அதை உருமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது, எனவே ஒரு படைப்பாளரின் படைப்பை கேலி செய்வது போன்று ஒரு மாற்றம் செய்யப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனவே அந்த அடிப்படையில் முன் அனுமதி இன்றி பாடல்களை பயன்படுத்தியது மற்றும் உருமாற்றம் செய்தது ஆகிய இரண்டு விஷயங்கள் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
#WATCH | GBU படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன்?
— Sun News (@sunnewstamil) April 15, 2025
இளையராஜா தரப்பு வழக்கறிஞர்கள் விளக்கம்#SunNews | #GoodBadUgly | #Ilayaraja | #AjithKumar pic.twitter.com/HNEdApdt8T
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments