close
Choose your channels

விஜய்சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய இளையராஜா!

Wednesday, March 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காக்கா முட்டை குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கி முடித்திருக்கும் அடுத்த படம் ’கடைசி விவசாயி’. விஜய் சேதுபதி, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வந்தார். இந்த படத்தின் போஸ்டர்களிலும் புரமோஷன்களிலும் இளையராஜாவின் பெயர் தான் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இசைஞானி கம்போஸ் செய்த பாடல்கள் இயக்குனர் மணிகண்டனுக்கு திருப்தி இல்லை என்பதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இளையராஜா இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos