close
Choose your channels

யுவன் பிறக்கும்போது இளையராஜா கம்போஸ் செய்த பாடல் எது தெரியுமா? அவரே கூறிய வீடியோ!

Wednesday, August 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் பிறக்கும் போது தான் எந்த படத்திற்கு எந்த பாடலை கம்போஸ் செய்தேன் என்ற தகவலை இசைஞானி இளையராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் இசைஞானி இளையராஜா தனது மகன் யுவன்சங்கர் ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர்கூறியதாவது: ’ஆழியார் டேம் அருகேயுள்ள கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்று பாடல்களை கம்போஸ் செய்து அந்த காலத்தில் வழக்கமாக இருந்தது. அந்த வகையில் இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ’ஜானி’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘சொனோரீட்டா ஐ லவ் யூ’ என்ற பாடலை கம்போஸ் செய்து கொண்டிருந்தபோதுதான் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி வந்து எனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக கூறினார்

அந்த குழந்தைதான் யுவன் சங்கர் ராஜா என்றும் இசைஞானி இளையராஜா தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு யுவனுக்கு வாழ்த்து இருந்தது தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos