இசைஞானிக்கு மத்திய அமைச்சர் கொடுத்த மதிப்பு மிகுந்த விருது

  • IndiaGlitz, [Saturday,November 21 2015]

1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து கின்னஸ் சாதனை செய்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இன்று சிறந்த திரைப்பட கலைஞருக்கான நூற்றாண்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த விருதை மத்திய நிதியமைச்சரும் செய்தி ஒளிப்பரப்பு துறை அமைச்சருமான அருண்ஜெட்லி இன்று பனாஜியில் நடைபெற்ற விழா ஒன்றில் இசைஞானிக்கு வழங்கினார். இந்த விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் அனில்கபூர் கலந்து கொண்டார்.

இதே விருது கடந்த 2014ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டு வருடங்கள் இந்த விருது கோலிவுட் திரையுலக மேதைகளுக்கு வழங்கப்பட்டது என்பது ஒரு பெருமையான விஷயம் ஆகும்

அன்னக்கிளி படத்தில் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்து 'தாரை தப்பட்டை' வரை 1000 படங்களை கடந்துவிட்ட இசைஞானி, இன்றும் முன்னணி இசையமைப்பாளராக கோலிவுட்டில் வலம் வருகிறார்.

More News

விஜய் 60' வாய்ப்பு அஜித்தால் கிடைத்ததா?

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 'விஜய் 60' படத்தை இயக்கும் வாய்பை பெற்ற 'அழகிய தமிழ்மகன்' இயக்குனர் பரதன்...

4வது முறையாக விஜய்யுடன் இணையும் பரதன். புதிய தகவல்

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 60வது படமான 'விஜய் 60' படத்தை பரதன் இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படும் 'தனி ஒருவன்?

ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் வெற்றி படங்களில் ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது....

நீதிமன்றத்தில் ஆஜராக நடிகர் வடிவேலுவுக்கு உத்தரவு

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் மற்றும் சரத்குமார் அணிகள் மோதின...

ஆர்யாவின் 'இஞ்சி இடுப்பழகி' சென்சார் தகவல்கள்

'இஞ்சி இடுப்பழகி' என்ற பெயரில் தமிழிலும், 'சைஸ் ஜீரோ' என்ற பெயரில் தெலுங்கிலும் ஆர்யா, அனுஷ்கா நடித்த திரைப்படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ்...