close
Choose your channels

பேத்திக்கு டீச்சராக மாறிய இசைஞானி இளையராஜா… இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ!

Friday, April 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

“கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்“ என்ற பழமொழியை பலரும் கேட்டு இருப்போம். இந்தப் பழமொழியில் துளியும் பொய் இல்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் இசைஞானி இளையராஜாவின் வீட்டில் உள்ள ஒரு பிஞ்சுக் குழந்தை பியானோ முன்பு அமர்ந்து கொண்டு வித்தை காட்டுகிறது. இந்தக் காட்சியைப் பார்த்த இணைய வாசிகள் பலரும் கம்பனுக்கு மட்டும் அல்ல, எங்கள் இளையராஜாவிற்கும் இந்தப் பழமொழி பொருத்தமாகத்தான் இருக்கும். இளையராஜா வீட்டில் இருக்கும் தூண் கூட இசையை மீட்டிக் கொண்டுதான் உயிர்வாழும் எனும் அளவிற்கு கமெண்டுகளை அள்ளிவிட்டு மெச்சி வருகின்றனர்.

இசைஞானி என்ற பெயரை தமிழ் ரசிகர்கள் மட்டும் அல்ல, அனைத்து இசை ரசிகர்களும் உச்சிக் கொட்டியே ரசித்து வருகின்றனர். அந்த அளவிற்கு தனது இசை ஆளுமையால் பல மொழி ரசிகர்களையும் கட்டிப்போட்டு வைத்து இருக்கும் ஒரு மெட்டுக்காரர் இளையராஜா. அவருடைய பாடல்களைக் கேட்டுக்கும்போது லயித்து நிற்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை இன்றைக்கும் தனது புதுப்புது மெட்டுகளால் ஈர்த்து வருகிறார்.

அவர் தற்போது யுவன்சங்கர் ராஜாவின் குழந்தை ஜியாவிற்கு இசையைக் கற்றுக் கொடுக்கும் விதமாக வாசிங்க.. எனச் சொல்லி பியானோவை மீட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் புலிக்கு பிறந்தது சும்மாவா இருக்கும்… எனப் பலரும் குழந்தை ஜியாவைப் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos