எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன்? இளையராஜா தரப்பின் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,March 20 2017]

காப்புரிமை சட்டத்தின்படி தான் இசையமைத்த பாடல்களை எஸ்பிபி தான் இல்லாத மேடையில் பாடக்கூடாது என சமீபத்தில் இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். இந்த விவகாரம் குறித்து அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. எஸ்பிபிக்கு ஆதரவாக பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் இளையராஜாவின் தரப்பில் அவரது காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

பிரதீப்குமார் தனது விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்களது கேள்வி எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கான கேள்வியாக பார்த்து யாரும் தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, காப்புரிமை பணியை தொடர்கிறோம். இது எஸ்.பி.பி-க்காக மட்டும் அனுப்பிய நோட்டீஸ் அல்ல. உரிய அனுமதியை பெற்று பாடுங்கள் என கூறுகிறோம்.

கிராமங்களில் கச்சேரி நடத்துபவர்களுக்கு இது பொருந்தாது. கிராம கச்சேரி கலைஞர்கள் பிழைப்புக்காக பாடுகின்றனர். ஆனால் சிலர் வருமான நோக்கோடு கச்சேரி செய்கின்றனர். வருமானம் ஈட்டுபவர்களிடம் உரிமையை கேட்கிறோம். இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

More News

சந்திரஹாசன் மறைவிற்கு ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் இரங்கல்

உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் அவர்களின் திடீர் மறைவு கமல் குடும்பத்தினர் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் கமல்ஹாசனின் மிக நெருக்கமான நண்பர்களான ரஜினிகாந்த் மற்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்...

'மாநகரம்' படத்தின் மலைக்க வைக்கும் 2வது வார வசூல்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா நடித்த 'மாநகரம்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்றது. கதை சொல்லிய விதம், கடைசி வரை சென்ற விறுவிறுப்பாக திரைக்கதை ஆகியவை சூப்பர் ஸ்டார் ரஜினியே பாராட்டும் அளவுக்கு இருந்தது...

ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ்லீ' ஓப்பனிங் வசூல் விபரங்கள்

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடித்த 'புரூஸ்லீ' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கடும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ஊடகங்களாலும், சமூக வலைத்தளங்களாலும் முதல் காட்சி முடிந்தது முதலே கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டதால் சராசரிக்கும் குறைவாகவே இந்த படம் ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது...

பாடல்களின் ராயல்டி இளையராஜாவுக்கு மட்டும் சொந்தமில்லை. மதன்கார்க்கி

இசைஞானி இளையராஜா, தான் இசையமைத்த பாடல்களின் காப்புரிமை குறித்து பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பெரும்பான்மையோர் இளையராஜாவின் நோட்டிஸ் நடவடிக்கையை விமர்சித

இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை பாட மாட்டேன். எஸ்பிபி

இசைஞானி இளையராஜாவும், பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களும் எந்த அளவுக்கு நெருக்கமானவர்கள் என்பது திரையுலகம் அறிந்ததே. ஆனால் சமீபகாலமாக இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக உறுதி செய்யாத தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது...