ரசிகரின் வேண்டுகோளை நிறைவேற்றிய சூர்யாவுக்கு விஜய் நன்றி

  • IndiaGlitz, [Saturday,March 18 2017]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது 'சி 3' படத்தின் புரமோஷனுக்காக கேரளா சென்றிருந்தபோது, மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர் ஒருவர், தனது கையினாலே வரைந்த விஜய்யின் ஓவியத்தை சூர்யாவிடம் கொடுத்து அதை விஜய்யிடம் சேர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்த செய்தியை நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் நேற்று சூர்யாவின் 2D என்டர்டெயிண்மெண்ட் நிறுவனத்தின் இயக்குநர் ராஜ்சேகர பாண்டியன், சூர்யா சார்பில் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து அந்த ஓவியத்தை வழங்கியுள்ளார். தனது ரசிகரின் அன்பு பரிசான அந்த ஓவியத்தை பெற்றுக் கொண்ட விஜய், சூர்யாவுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து ராஜசேகர பாண்டியன் கூறியபோது, 'விஜய் சாரின் மேனேஜர் என்னை போனில் அழைத்து, நாங்கள் இருவரும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். தற்போது விஜய் சார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில், அவரை சந்தித்தேன். புன்னகையுடன் அந்த பரிசை வாங்கிக் கொண்ட விஜய், சூர்யாவுக்கு தனது நன்றிகளை தெரிவித்தார்' என்று கூறினார்.

More News

'பாகுபலி 2' படத்தின் இசை வெளியீட்டு தேதி

இந்தியாவின் மிகப் பிரமாண்டமான திரைப்படங்களில் ஒன்றாகிய 'பாகுபலி 2' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது அந்த படத்தின் டிரைலருக்கு கிடைத்த வெற்றியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சமந்தா-நாகசைதன்யா ஜோடி சேர வாய்ப்பில்லை. வதந்திக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி

பிரபல நடிகை சமந்தாவும், பிரபல நடிகர் நாக சைதன்யாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

ஒரே மாதத்தில் உடைந்தது தீபா கட்சி. தனிக்கட்சி ஆரம்பிக்கின்றார் கணவர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சமீபத்தில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார்

ஆர்.கே.நகரில் கங்கை அமரன் போட்டி. அதிகாரபூர்வ அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் வரும் ஏப்ரம் 12-ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் அரசியல் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் தேசிய கட்சியான பாரதிய ஜனதாவும் தற்போது வேட்பாளரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவு தேதி அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுக ஒன்றுபட்டு இருந்தது. ஆனால் அவருடைய மறைவிற்கு பின்னர் ஒருசில மாதங்களில் அதிமுக, சசிகலா அணி மற்றும் ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது...