close
Choose your channels

'தளபதி 61' படத்துடன் கனெக்சன் ஆன மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்'

Wednesday, May 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இளையதளபதி விஜய் எந்த அளவுக்கு பெரிய நடிகரோ, அதற்கு சமமாக டோலிவுட்டில் மகேஷ்பாபு பெரிய நடிகர். மகேஷ்பாபு நடித்த சில படங்களின் ரீமேக்கில் விஜய் நடித்துள்ளார். இருவரையும் இணைத்து ஒரு படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் மணிரத்னம் முயற்சி செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் 'தளபதி 61' படத்திலும் மகேஷ்பாபு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'ஸ்பைடர்' என்ற படத்திலும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் 'ஸ்பைடர்' படத்தில் நடித்து வரும் முக்கிய நடிகர் ஒருவர் 'தளபதி 61' படத்தில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'ஆயிரத்தில் ஒருவன், 'கிடாரி' போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த ஹரீஷ் பெராடி என்பவர் தற்போது தளபதி 61' படத்தில் இணைந்துள்ளதாகவும், இவர் இந்த படத்தின் திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே 'ஸ்பைடர்' படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இவருக்கு முக்கிய கேரக்டரை கொடுத்த நிலையில் தற்போது விஜய் படத்திலும் அவருக்கு முக்கிய கேரக்டர் கிடைத்துள்ளது. எனவே இந்த இரு படங்களும் வெளிவந்தவுடன் ஹரீஷூக்கு கோலிவுட், டோலிவுட் திரையுலகில் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.