திருமணமும் ஆகவில்லை, கர்ப்பமும் இல்லை: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை

  • IndiaGlitz, [Friday,November 16 2018]

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த 'நண்பன்' படம் உள்பட ஒருசில தமிழ் படங்களிலும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையுமான இலியானாவுக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவருக்கும் திருமணமாகிவிட்டதாகவும், தற்போது இலியானா கர்ப்பமாக இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக வதந்திகள் எழுந்து வந்தன.

இந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலியானா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். 20 வயதில் நடிக்க வந்து தொடர்ந்து 12 ஆண்டுகளாக சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாகவும், தனக்கு இன்னும் திருமணமும் நடக்கவில்லை, தான் கர்ப்பமாகவும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இதற்குமேல் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தெலுங்கு, இந்தி படங்களில் இன்னும் பிசியாக இருக்கும் நடிகை இலியானா நடித்த 'அமர் அக்பர் அந்தோணி' என்ற தெலுங்கு படம் இன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழக அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு

கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,

கஜா புயல் எதிரொலி: 24 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் ஏற்பட்ட கஜா புயல் இன்று அதிகாலை கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டை பெற்ற பேபிக்கு அடித்த அதிர்ஷ்டம்

ஆந்திர் மாநிலத்தை சேர்ந்த பேபி என்ற பெண், ரஹ்மான் இசையில் கடந்த 1994ஆம் ஆண்டு வெளிவந்த 'காதலன்' படத்தில் இடம்பெற்ற 'என்னவளே' என்ற பாடலின் தெலுங்கு பதிப்பை பாடிய வீடியோ நேற்று வைரலானது.

கஜா புயல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் பலி

இன்று அதிகாலை நாகை அருகே கஜா புயல் கரையை கடந்த நிலையில் இந்த புயலால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் அதிக சேதம் அடைந்திருப்பதாகவும்

வர்தா புயலுக்கு நிகரான வேகம்: கஜா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன்

வங்கக்கடலில் உருவான கஜா புயல சில மணி நேரங்களுக்கு முன் தமிழக கரையை கடந்துள்ள நிலையில் இந்த புயல் வர்தா புயலுக்கு நிகரான வேகத்தை கொண்டிருந்ததாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.