டீன் ஏஜில் பிகினி போஸ் கொடுத்த இலியானா: வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Thursday,July 29 2021]

பிரபல நடிகை இலியானாவுக்கு தற்போது 33 வயது ஆகும் நிலையில் அவர் டீன் ஏஜில் இருக்கும் போதே பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2006ஆம் ஆண்டு தமிழில் ’கேடி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை இலியானா, அதன்பின் தெலுங்கு திரையுலகில் பிரபலமானார். அங்கு ஏராளமான ஹிட் கொடுத்த இலியானா நீண்ட இடைவெளிக்குப் பின் 2011ஆம் ஆண்டு விஜய் நடித்த ’நண்பன்’ படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி ஆனார். அதன்பின்னர் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் தெலுங்கு திரையுலகிலும் பாலிவுட்டிலும் அவர் தற்போது வரை பிரபலமான நடிகையாக உள்ளார் என்பதும் தற்போது இரண்டு பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இலியானாவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 13 மில்லியனுக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது இன்ஸ்டாகிராமில் அவர் பிகினி புகைபடங்கள் உள்பட பல கிளாமரான புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன் டீன் ஏஜில் எடுக்கப்பட்ட பிகினி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு 8 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.