'விஜய் 62' படத்திலும் 3 நாயகிகளா?

  • IndiaGlitz, [Wednesday,April 12 2017]

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தில் காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யாமேனன் என மூன்று நாயகிகள் நடித்து வருவது தெரிந்ததே. இந்த படத்தில் விஜய் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருவதால் மூன்று நாயகிகள் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய்யின் அடுத்தபடமான அவரது 62வது படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் இந்த படத்திலும் மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாகவும், அவர்கள் ராகுல் ப்ரித்திசிங், டாப்சி மற்றும் எமிஜாக்சன் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர்களில் ராகுல் ப்ரித்திசிங், டாப்சி ஆகியோர் விஜய்யுடன் முதன்முதலாக நடிக்கவுள்ளனர் என்பதும் எமிஜாக்சன் 'தெறி' படத்தில் இணைந்து நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்த விஜய்-முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

பெட்ரோல்-டீசல்: மே 1 முதல் தினசரி விலைமாற்றம்

இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை கச்சா எண்ணெயின் சர்வதேச விலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

26 வருடங்களுக்கு பின் ராஜ்கிரணுடன் மீண்டும் மோதும் பி.வாசு

பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த 'சிவலிங்கா' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.

'தல' தோனியை அவமதித்த புனே அணி உரிமையாளரின் சகோதரருக்கு சாக்சி கொடுத்த பதிலடி

பிரபல கிரிக்கெட் வீரர் தல தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோதிலும், அவருக்கு ரசிகர்கள் கூட்டம் குறையாமல் அதே புகழுடன் உள்ளார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது அவர் புனே அணியில் விளையாடி வருகிறார்...

மக்கள் திருப்பி அடித்தால் ராணுவமே வந்தாலும் தாங்காது - மயில்சாமி

திருப்பூரில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அறவழியில் போராடிய பெண்களை காட்டுமிராண்டித்தனமாக போலீசார் தாக்கியதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் இதுகுறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கரை தகுதி நீக்கம் செய்ய தமிழக கவர்னரிடம் திமுக தலைவர்கள் மனு

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் அவர்களை திமுக தலைவர்கள் இன்று மும்பையில் சற்றுமுன்னர் நேரில் சந்தித்தனர்...