இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருந்து கொடுத்த இளையதளபதி

  • IndiaGlitz, [Monday,July 06 2015]

இஸ்லாமியர்களின் புனித நாளான ரம்ஜான் நோன்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பிரபலங்கள், அரசியல்வாதிகள், மற்றும் வி.ஐ.பிக்கள் இஸ்லாமிய நண்பர்களுக்கு இஃபதார் விருந்து கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இளையதளபதி விஜய் 100 இஸ்லாமியர்களுக்கு நேற்று இஃப்தார் விருந்து கொடுத்துள்ளார்.

விஜய் தனது கையாலே இஃபாதர் விருந்து பரிமாறியதால் விருந்துக்கு வந்தவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்ததாக விருந்தில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர். மேலும் இஃப்தார் விருந்து கொடுத்த விஜய் அவர்களுடன் உட்கார்ந்து விருந்து சாப்பிட்டார்.

இந்நிலையில் விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் செப்டம்பரில் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 59' திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

More News

பாபநாசத்தை பாராட்டிய பிரபலங்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் ரிலீஸாகி பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று வருகின்றது. ஊடகங்களும், ரசிகர்களும் படத்தை பாராட்டி வரும் கோலிவுட் பிரபலங்களும் கமல்ஹாசனுக்கு பாபநாசம் படக்குழுவினர்களுக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.....

கமல்-ரஜினி பாணியை கடைபிடிக்கும் சல்மான்கான்

ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்னால் ரிகர்சல் செய்ய வேண்டும் என்ற வழக்கம் எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த பழைய படங்களின் படப்பிடிப்பின்போது இருந்தது.....

கார்த்தி நாகார்ஜுனன் படத்தின் டைட்டில் அறிவிப்பு

மெட்ராஸ், கொம்பன் என தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் கார்த்தி, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனனுடன் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. சென்னை, ஐதராபாத் மற்றும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடக்கவுள்ள இந்த படத்தின் நாயகியாக தமன்னா நடித்து வருகிறார்.......

உலக நாயகனின் ரியல் மகளை முந்திய ரீல் மகள்

கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி பெரும் வரவேற்புடன் உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கின்றது.......

சென்னை மெட்ரோ ரயிலில் விஷ்ணு காதல்

சென்னை நகர மக்களின் கனவுத்திட்டமான மெட்ரோ ரயில் சேவை கடந்த திங்கட்கிழமை தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது......