'பைரவா' படத்தின் ஸ்பெஷல் கிரிக்கெட் ஃபைட். அனல் அரசு

  • IndiaGlitz, [Friday,December 23 2016]


இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் சண்டைக்காட்சிகள் குறித்து சமீபத்தில் ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த படத்தில் மொத்தம் ஐந்து சண்டைக்காட்சிகள் இருப்பதாகவும், அதில் ஸ்பெஷல் சண்டைக்காட்சியாக கிரிக்கெட் ஃபைட் ஒன்று இருப்பதாகவும் கூறினார். இந்த படத்தின் ஓப்பனிங் ஃபைட்டாக வரும் இந்த ஃபைட் கிரிக்கெட் சார்ந்த ஒரு ஃபைட் சீன். இந்த சண்டைக்காட்சியின் ஒருசில ஷாட்கள் டிரைலரிலும் வந்துள்ளது. இந்த சண்டைக்காட்சியின் படப்பிடிப்பின்போது விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் ரொம்ப என்ஜாய் செய்து படமாக்கினோம் என்று கூறினார்.

உண்மையில் அது சண்டைக்காட்சியே அல்ல, அதுவொரு கிரிக்கெட் விளையாட்டுதான். பேட்டால் யாரையும் அடிக்கக்கூடாது, வில்லன்களும் விஜய்யை அடிக்கக்கூடாது, ஆனால் சண்டை நடக்க வேண்டும், அதாவது அது சண்டைக்காட்சியா, கிரிக்கெட் விளையாட்டா? என்று அனைவரும் நினைக்கும் அளவுக்கு படமாக்கியுள்ளோம், இந்த சண்டைக்காட்சி ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும்' என்று கூறினார்.

More News

ஒரே நாளில் 'பவளக்கொடி'யை முடித்த நயன்தாரா

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடித்த 'டோரா' என்ற திகில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

வீடு தேடி வரும் 2000 ரூபாய் நோட்டு. இ-காமர்ஸ் நிறுவனத்தின் புதிய முயற்சி

உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8ஆம் தேதி அறிவித்ததில் இருந்து வங்கி வாசலிலும், ஏடிஎம் வாசலிலும் பொதுமக்கள் தங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்க நீண்ட நேரம் வரிசையில் நிற்பது தொடர்கதையாகி வருகிறது

விவாகரத்து விஷயத்தில் செளந்தர்யா ரஜினிகாந்த் எடுத்த முக்கிய முடிவு.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளையமகளும், இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக கணவர் அஸ்வினிடம் இருந்து பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் இருவரும் விவாகரத்து பெற உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியுள்ளது. இதை செளந்தர்யா தனது சமூக வலைத்தளத்தில் ஏற்கனவே உறுதி செய்திருந்தார்.

நயன்தாரா ஏன் முதல் இடத்துல இருக்காங்கன்னு புரிஞ்சுகிட்டேன். 'டோரா' இயக்குனர்

'மாயா' வெற்றி படத்தை அடுத்து நயன்தாரா நடிக்கும் அடுத்த பேய்ப்படம் 'டோரா'. சற்குணம் தயாரிப்பில் அவரது சிஷ்யர் தாஸ் ராமசாமி இந்த படத்தை இயக்குகிறார்.

சபாஷ் சரியான போட்டி. சசிகலாவை எதிர்த்து சசிகலா புஷ்பா போட்டியா?

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த சக்திமிக்க பதவியான அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற அவரது தோழி சசிகலா முயன்று வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் மேலும் அதே பதவிக்கு அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவும் குறி வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.