'விஜய் 61' படம் குறித்த புத்தம் புதிய தகவல்

  • IndiaGlitz, [Saturday,January 28 2017]

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 61வது படத்தை இயக்குனர் அட்லி இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழு குறித்தும் நேற்று விரிவாக பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரம் தொடங்கவுள்ளது. மேலும் இந்த படத்தின் கதை கடந்த 80களில் நடப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையம், பின்னி மில் மற்றும் சென்னையில் உள்ள முக்கிய ஸ்டுடியோக்களில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படம் இவ்வாண்டு தீபாவளி விருந்தாக திரைக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா, சத்யராஜ், வடிவேலு உள்பட பல பிரபலங்கள் இந்த படத்தில் இணணந்துள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது.