சட்டமன்றத்தில் முதல்வர் காட்டிய பின்லேடன் படம் எங்கு எடுக்கப்பட்டது? திடுக்கிடும் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,February 01 2017]

சென்னை மெரீனாவில் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துவிட்டதாகவும், அதன் காரணமாகவே வன்முறை வெடித்ததாகவும் அரசு தரப்பிலும் காவல்துறையினர் தரப்பிலும் கூறப்பட்டது. இதற்கு ஆதாரமாக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் மெரீனா போராட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பின்லேடன் புகைப்படத்துடன் ஒரு வாலிபர் இருக்கும் புகைப்படத்தை சட்டமன்றத்தில் காண்பித்தார்.
இந்நிலையில் இந்த புகைப்படம் மெரீனா போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது அல்ல என்றும் அதற்கு முன்னர் அதாவது கடந்த டிசம்பர் மாதம் முஸ்லீம் அமைப்பு ஒன்று நடத்திய முற்றுகை போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது என்றும் தற்போது தெரிய வந்துள்ளது.
இதற்கு ஆதாரமாக இருசக்கர வாகனத்தில் பின்லேடனுடன் சென்ற அந்த வாலிபரே ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஜனவரி 23ஆம் தேதி தான் வேலை செய்யும் சிக்கன் கடையில் இருந்ததாகவும், அதற்கு ஆதாரமாக சிசிடிவி கேமிராவில் தான் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 5 மணி பணி செய்த வீடியோ உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றில், தான் தன்னுடைய நண்பருடன் இணைந்து கலந்து கொண்டதாகவும் அப்போது தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பின்லேடன் படம் வைத்திருந்ததாகவும், அந்த படம் தான் தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எடுக்கப்பட்டதாக தவறாக பரப்பப்படுவதாகவும் அவர் அந்த ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி தெரிவித்துள்ளார்.

More News

தேவைப்பட்டால் அரசியலுக்கு வரத்தயார். ராகவா லாரன்ஸ்

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பம் முதல் கடைசி வரை பெரும் ஆதரவு கொடுத்தவர்களில் முக்கியமானவர் நடிகர் லாரன்ஸ்.

மெரீனா வன்முறைக்கு விசாரணை கமிஷன். ஓய்வுபெற்ற நீதிபதியை நியமனம் செய்த முதல்வர்

சென்னை மெரீனாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டத்தின் கடைசி தினத்தில் நடந்த வன்முறையால் மாணவர்கள், பொதுமக்கள் குறிப்பாக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்...

நேற்று பாராளுமன்றத்தில் மயங்கி விழுந்த எம்பி இன்று மரணம்

நேற்று பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருந்தபோது கேரள எம்பி அகமது என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் நாடாளுமன்றம் அருகிலுள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்...

அரவிந்தசாமியுடன் முதல்முறையாக இணையும் நந்திதா

'தனி ஒருவன்' படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி ஆன அரவிந்தசாமி, ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்து நடித்த 'போகன்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ...

ஜனவரியில் மிஸ் ஆன தல-தளபதி சந்திப்பு பிப்ரவரியில் நடக்குமா?

கடந்த மாதம் ஜல்லிக்கட்டுக்காக கோலிவுட் திரையுலகினர் நடத்திய மெளன உண்ணாவிரத போராட்டத்தின்போது அஜித், விஜய் சந்திப்பு நடக்கும் என்று எதிர்பர்க்கப்பட்டது. ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அஜித் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டாலும், விஜய் கலந்து கொள்ளாததால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை...