நயன்தாரா மகளாக நடித்த பிரபல காமெடி நடிகரின் மகள்

  • IndiaGlitz, [Saturday,September 08 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் சூப்பர் ஹிட்டாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்தில் நடித்த நயன்தாரா உள்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த சுட்டிக்குழந்தை மானஸ்வி அனைவரின் கவனத்தை பெற்றார். குறிப்பாக போலீஸ்காரராக நடித்தவருடன் இந்த குழந்தை பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் பலத்த கைதட்டல் கிடைத்தது.

இந்த நிலையில் இந்த சுட்டிக்குழந்தை பிரபல காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் என தெரியவந்துள்ளது. மேலும் அரவிந்தசாமி நடித்து வரும் 'சதுரங்க வேட்டை 2' படத்தில் இந்த குழந்தை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கொட்டாச்சி 'காவியத்தலைவன், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி உள்பட பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் என்பது தெரிந்ததே

More News

பிக்பாஸ் எவிக்சனில் எதிர்பாராத திருப்பம்: வெளியேறியது யார் தெரியுமா?

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேறி வரும் நிலையில் இந்த வாரம் மும்தாஜ், செண்ட்ராயன், ஜனனி, ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் எவிக்சன் பட்டியலில் இருந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாமர்த்தியமாக வாக்கு சேகரிக்கும் கமல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்துவிட்ட நிலையில் தற்போது விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் விபத்து: ஒருவர் மரணம் அடைந்ததால் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 80 நாட்களுக்கும் மேல் நடந்து வரும் நிலையில் இன்று ஏசி மெக்கானிக் ஒருவர் தவறி விழுந்து பலியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'இந்தியன் 2' படத்தில் இணைந்த முக்கிய நடிகர்

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய 'இந்தியன்' திரைப்படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனையடுத்து 22 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது.

'பிக்பாஸ் 2' ஃபைனலை நெருங்குவது யார் யார்?

கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.