நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

  • IndiaGlitz, [Wednesday,May 17 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அதன்படி சற்று முன்னர் இந்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்துள்ளது.

இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் நயன்தாரா நடுவிலும் இடது புறம் அனுராக் காஷ்யப் மற்றும் வலது புறம் அதர்வா நின்று கொண்டு, ஒருவர், மற்றொருவரின் முகமூடியை கையில் வைத்துள்ளனர். வித்தியாசமான சிந்தனையில் உருவாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட்லுக்கே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டும் வகையில் உள்ளது. மேலும் நாளை இதே நேரத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வா, நயன்தாரா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை அஜய்ஞானமுத்து இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே அருள்நிதியின் 'டிமாண்டி காலனி' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

More News

பெண்கள் பற்றாக்குறை எதிரொலி: ஒரே பெண்ணை திருமணம் செய்யும் அண்ணன் - தம்பிகள்

மகாபாரத கதையில் பாண்டவர்களான ஐந்து சகோதரர்களை பாஞ்சாலி என்ற ஒரே பெண் திருமணம் செய்தார் என்பதை படித்துள்ளோம்.

அஜித், விஜய்யின் அடுத்த படங்களின் பரபரப்பு தகவல்கள்

கோலிவுட் திரையுலகின் இரண்டு மாஸ் நடிகர்கள் என்றால் அது அஜித் மற்றும் விஜய் என்று அனைவரும் சொல்லிவிடுவார்கள்...

'சங்கமித்ரா'வின் கதைக்களம் இதுதான்: கேன்ஸ் விழாவில் ஒரு அறிமுகம்

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' என்ற பிரமாண்ட திரைப்படத்தை அடுத்து தயாராகவுள்ள பிரமாண்டமான சரித்திர திரைப்படம் 'சங்கமித்ரா'.

அபிராமி ராமநாதன் தலைமையில் தமிழ் திரைப்பட வர்த்தக சபை

சமீபத்தில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் அனுபவமுள்ள பல தயாரிப்பாளர்கள் போட்டியிட்ட போதிலும், விஷால் தலைமையிலான இளைஞர் அணி பெரும்பாலான பதவிகளை கைப்பற்றியது. இந்த நிலையில் தமிழ் திரைப்பட வர்த்தக சபை என்ற அமைப்பு உருவாகியுள்ளது...

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு

சமீபத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு,