'இமைக்கா நொடிகள்' சிங்கிள் டிராக் ரிலீஸ் எப்போது?
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன்களை ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதன்படி முதல்கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் டிராக் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியாகியுள்ள விளமபரம் ஒன்றில் இந்த படத்தின் சிங்கிள் டிராக் வெகுவிரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஹிப்ஹாப் தமிழன் ஆதி இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்களில் ஒன்று சிங்கிள் டிராக்காக இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில் அதர்வா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். கேமியோ பிலிம்ஸ்' ஜெயக்குமார் இந்த பிரம்மாண்ட கமர்ஷியல் க்ரைம் திரில்லர் படத்தை தயாரித்துள்ளார்.