close
Choose your channels

ஜனவரி 1 முதல் பல மாற்றங்கள் வரப்போகுது… இதுகுறித்த வீடியோ விளக்கம்!!!

Wednesday, December 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜனவரி 1 முதல் பல மாற்றங்கள் வரப்போகுது… இதுகுறித்த வீடியோ விளக்கம்!!!

 

2020 முடிவுறும் பெறும் நிலையில் சில முக்கிய அரசாங்க விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விதிமுறைகள் அனைத்தும் வரும் ஜனவரி 1 ஆம் தேதியில் முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் FastTag கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்து இருக்கிறார்.

முன்னதாக கடந்த நவம்பரில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் இனி FastTag வாங்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் தற்போது வெளியிட்டு உள்ள அறிவிப்பில் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் FastTag கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இப்புதிய வசதி மூலம் 4 சக்கர வாகனங்கள் சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்கலாம் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.

அடுத்து 2021 முதல் வங்கிக்கான செக் பரிவர்த்தனையில் பல புதிய மாற்றம் வரப்போகிறது. அதாவது செக் பணப்பரிவர்த்தனைக்கு முன்னதாக நாம் சில விவரங்களை வங்கிக்கு அளிக்க வேண்டி இருக்கும். இந்த விவரங்களை பெறுவதன் மூலம் வங்கிகள் எளிதாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளனர். எனவே 50,000 ஆயிரத்திற்கும் மேல் பணத்தை செக் மூலம் பணப்பரிவர்த்தை செய்யும் வாடிக்கையாளர்கள், இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றம் கூறப்பட்டு உள்ளது. மேலும் செக் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும்போது ஏற்படும் காலதாமதத்தை குறைக்கவும் ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்து இருக்கிறது. இதனால் 2 நாட்களுக்குப் பிறகு கிடைக்கும் பணம் ஒரு நாள் முன்னதாகவே வாடிக்கையாளர்களுக்கு கிடைத்து விடும் வகையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

இதனால் செக்கை வங்கியில் போட்டு விட்ட 2 நாட்கள் வரையிலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அடுத்து தொடர்பில்லாத கார்ட் (contactless card) இல் இருந்து பணப்பரிவர்த்தனை செய்தவற்கான வரம்பு 2,000 இல் இருந்து 5,000 வரை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

அடுத்து சிறிய நிறுவனங்கள் எளிமையாக ஜிஎஸ்டி வரித்தாக்கல் செய்ய சில புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதனால் 5 கோடி ரூபாய் வரை வரி தாக்கல் செய்யும் நிறுவனங்கள் 4 ரிட்டன்களில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்று இருந்த விதிமுறையை மாற்றி இனி 12 ரிட்டன்களில் வரித்தாக்கல் செய்யலாம் எனும் நடைமுறை கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அடுத்து வாட்ஸ் அப் செயலி. இன்றைக்கு முக்கிய தகவல் பரிமாற்ற செயலியாக மாறிவிட்ட வாட்ஸ் அப் இனிமேல் பழைய ஆன்ட்ராய்ட் செல்போன்கள் மற்றும் IOS தளங்களுக்களில் இனி இயங்காது என்ற அறிவிப்பையும் அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.