அகமதாபாத் மைதானத்தில் அதானியும் ரிலையன்ஸும்? வைரலாகும் பெயர்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்து உள்ளார். அதோடு முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருக்கிறது.
இந்நிலையில் இந்தப் போட்டி நடைபெற்று வரும் அகமதாபாத் மோதோரா மைதானத்தில் அதானி, ரிலையன்ஸ் போன்ற பெயர்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. உலகிலேயே பெரிய மைதானமான அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் துவக்கி வைத்தார். அப்போது இந்த மைனதாத்திற்கு சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானம் என பெயர் வைக்கப்பட்டு இருந்தது.
பின்னர் புணரமைப்பு பணிகள் நடைபெற்று இன்று மீண்டும் அந்த மைதானம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த மைதானத்தின் பெயர் தற்போது நரேந்திர மோடி என மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் அந்த மைதானத்தின் பல்வேறு இடங்களில் ரிலையன்ஸ் மற்றும் அதானியின் பெயர்கள் அடையாளக் குறியீடுகளாக வைக்கப்பட்டு உள்ளன.
முதலில் பவுலிங் போடும் ஒரு முனையில் Adani end என்றும் மற்றொரு முனையில் Reliance end என்றும் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் இருக்கைகள் துவங்கும் இடம் மற்றும் முடியும் இடங்களிலும் இதேபோன்ற பெயர் பலகைகள் வைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ள இந்த மைதானத்தில் தற்போது அதானி, ரிலையன்ஸ் பெயர்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
In #NarendraModiCricketStadium bowlers bowling from Reliance End and Adani End ?????????????? pic.twitter.com/EJtQRsIKxk
— Ravinder Singh (@RvSinghofficial) February 24, 2021