கோயம்பேடு தொடர்பால் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா: எங்கே தெரியுமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் சென்னை உள்பட ஐந்து மாவட்டங்களுக்கு 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த நான்கு நாட்களுக்கும் தேவையான காய்கறிகளை வாங்க கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

சில்லரை வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரே நேரத்தில் குவிந்ததால் தனிமனித இடைவெளி என்பது காற்றில் பறக்கவிடப்பட்டது. இதன் பாதிப்பு ஓரிரு வாரங்களில் தெரியும் என அப்போதே சமூக ஆர்வலர்கள் எச்சரித்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கானோர் கோயம்பேடு காய்கறி சந்தையில் தொடர்புடையவர்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருவள்ளூரில் 290 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை இம்மாவட்டத்தில் மட்டும் 500ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

More News

கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் புதிய குழப்பம்!!! இது தடுப்பூசி ஆய்வில் தாமதத்தை ஏற்படுத்துமா???

கொரோனா நாவல் SARS-Covid-2 வைரஸ் பரவும் வேகமும் அதன் தன்மையும் நாளுக்கு நாள் மாறுபட்டு வருவதாக விஞ்ஞானிகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

தனிமனித இடைவெளியுடன் 'வாத்தி கம்மிங்' டான்ஸ்: அனிருத் ஆச்சரியம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.

சுப்ரீம் கோர்ட் போனாலும் விடமாட்டேன்: கமல்ஹாசன்

தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் சென்னை தவிர பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் இரண்டே நாட்களில் சுமார் 300 கோடி டாஸ்மாக் சரக்குகள் விற்பனை ஆகின என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்றும் கொரோனாவுக்கு 500க்கும் மேற்பட்டவரகள் பாதிப்படைந்ததாக

கொரோனா வைரஸால் பாதித்த ரசிகர்: சிம்பு செய்த நெகிழ்ச்சியான செயல்!

நடிகர் சிம்பு தனது ரசிகர்கள் மீது மிகுந்த பற்றும் பாசமும் உள்ளவர் என்றும் அவ்வப்போது ரசிகர்கள் இல்லை என்றால் நான் இல்லை என்று பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார் என்பதும் தெரிந்ததே