'குட் பேட் அக்லி' உட்பட இந்த வாரம் என்னென்ன படங்கள்? ஓடிடி ரிலீஸ் விவரங்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’ படம் உள்பட இந்த வாரம் சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், அது குறித்து தற்போது பார்ப்போம்.
அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான 'குட் பேட் அக்லி’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் வசூலிலும் சாதனை செய்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த நிலையில், திரையரங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ’குட் பேட் அக்லி’ ஓடிடியில் இந்த வாரம் வெளியாக உள்ளது. திரையரங்கில் போலவே ஓடிடியிலும் இந்த படம் மாபெரும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், சிபிராஜ் நடித்த ’10 ஹவர்ஸ்’ என்ற திகில் திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ’ஜாக்’ என்ற தெலுங்கு படம் வெளியாகவுள்ளது. அதுபோல், அமேசான் பிரைமில் ’Odela2’ என்ற தெலுங்கு படம் வெளியாகவுள்ளது. தமன்னா நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், ஜீ5 ஓடிடியில் ’ராபின்ஹூட்’ என்ற தெலுங்கு படம் வெளியாகவுள்ளது. மொத்தத்தில், இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இந்த திரைப்படங்கள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments