அசோக் செல்வனின் 'ப்ளூ ஸ்டார்' உட்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள்.. முழு விவரங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,February 29 2024]

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடி தளத்தில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். கடந்த மாதம் வெளியான அசோக்செல்வனின் ’ப்ளூ ஸ்டார்’ உட்பட இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் குறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்.

அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ் , கீர்த்தி பாண்டியன் உட்பட பலர் நடிப்பில் உருவான ’ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் திரையரங்குகளில் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது. இந்த படம் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதேபோல் ’மை நேம் இஸ் சுருதி’ என்ற ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடித்த தமிழ் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் இன்று ஆஹா ஓடிடியில் வெளியாகிறது. மேலும் ’எனக்கு எண்டே கிடையாது’ என்ற தமிழ் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ரவிதேஜா நடித்த ‘ஈகிள்’ என்ற தெலுங்கு திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில், ‘கேம் ஆன்’ என்ற தெலுங்கு திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில், ’பூட்கட் பாலராஜூ’ என்ற தெலுங்கு திரைப்படம் ஆஹா ஓடிடியில் ‘அம்பாஜிபேட்ட மேரேஜ் பேண்ட்’ என்ற தெலுங்கு திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

More News

90's Kids-களின் அன்பிற்குரிய செய்தி வாசிப்பாளர் ஸ்ரீதர் நாராயணன்: வெற்றிக்கு வழி காட்டிய மீனாட்சி அம்மன்!

செய்தி வாசிப்பாளர் ஸ்ரீதர் நாராயணன் தன்னுடைய சிறுவயது ஊக்கம், இளம் வயது அனுபவங்கள் மற்றும் வேலை கிடைத்த அனுபவங்கள் பற்றி விரிவாக பேசுகிறார்.

இது சோனியா அகர்வாலின் '7G'.. த்ரில்லரான டிரைலர் ரிலீஸ்..!

செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்த '7ஜி ரெயின்போ காலனி' என்ற திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருவதாக

'சிறகடிக்க ஆசை' சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா? என்ன காரணம்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் விறுவிறுப்பாகவும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில்

அந்த விபத்தில் என்ன தான் நடந்தது? 'எதிர்நீச்சல்' மதுமிதா வெளியிட்ட வீடியோ..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில் நடித்து வரும் நடிகை மதுமிதாவின் கார், காவல்துறையை சேர்ந்த ஒருவரின் பைக்கின் மீது மோதியதாகவும் அந்த காவல்துறை அதிகாரிக்கு

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சினிமாவில் நடிக்கிறாரா? அதுவும் தேசிய விருது பெற்ற இயக்குனர் படத்தில்?

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயா சிங் தேசிய விருது பெற்ற இயக்குனரின் திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.