'ஜவான்' உள்பட 5 தமிழ்ப்படங்கள்.. இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..!

  • IndiaGlitz, [Friday,November 03 2023]

ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ உள்பட இந்த வாரம் 5 தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதை அடுத்து ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.

பாரதிராஜா நடித்த ’மார்கழி திங்கள்’ தவிர வேறு எந்த படமும் கடந்த வெள்ளி அன்று வெளியாகவில்லை என்பதால் அதற்கு பதிலாக ஓடிடியில் 5 தமிழ் படங்கள் வெளியாக உள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’ஜவான்’ என்ற திரைப்படம் இன்று முதல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

அதேபோல் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ’ரத்தம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியான நிலையில் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது.

மேலும் சேரன் நடித்த ’தமிழ்க்குடிமகன்’ என்ற திரைப்படம் இன்று ஆகா ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ’ஆர் யூ ஓகே பேபி’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியான நிலையில் இந்த படமும் இன்று ஆகா ஓடிடியில் வெளியாகிறது

அதுமட்டுமின்றி விக்ரம் பிரபு நடிப்பில் உருவான ’இறுகப்பற்று’ என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் 6ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ‘ஸ்கண்டா’ என்ற தெலுங்கு படம் ஹாட்ஸ்டாரிலும், ‘மேட்’ என்ற தெலுங்கு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும், ‘மந்த் ஆப் மது’ என்ற தெலுங்கு படம் ஆகா ஓடிடியிலும் வெளியாகவுள்ளது. அதேபோல் ‘ஒரு துள்ளி தாப்பா’ என்ற மலையாள படம் ஹெச்.ஆர் ஓடிடியில் வெளியாகிறது.

More News

பெண் போட்டியாளரை ஜெயிலுக்கு அனுப்பிய கேப்டன் பூர்ணிமா.. பிரதீப் எப்படி தப்பித்தார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர் இன்று ஜெயிலுக்கு அனுப்பப்பட்டதாக ப்ரோமோ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'லியோ' வெற்றி விழா முடிந்ததும் தாய்லாந்து பறந்த விஜய்.. மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது.

நள்ளிரவில் திடீரென மருத்துவமனை சென்ற விஜய்.. யாருக்கு என்ன ஆச்சு?

தளபதி விஜய் நள்ளிரவில் திடீரென மருத்துவமனை சென்றதாக ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்கள் நோக்கம் முழுமை அடைந்தது.. தமிழக முதல்வருக்கு நன்றி சொன்ன சூர்யா..!

எங்கள் படைப்பின் நோக்கம் முழுமை அடைந்தது என்றும் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி என்றும் நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மாஸ் நடிகருடன் முதல்முறையாக செல்வராகவன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது தெரிந்ததே.