இந்த வாரம் ஓடிடியில் ஒரே ஒரு தமிழ்ப்படம் தான்.. ஆனாலும் செம விருந்து..!

  • IndiaGlitz, [Thursday,February 02 2023]

ஒவ்வொரு வாரமும் திரையரங்களில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி சினிமா ரசிகர்களுக்கு விருந்தாகி வரும் நிலையில் திரையரங்குகளில் ரிலீசான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியிலும் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் ஒரே ஒரு தமிழ் படம் உள்பட மொத்தம் எட்டு திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின், கோவை சரளா நடிப்பில் உருவான ’செம்பி’ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்த வாரம் ரிலீசாக உள்ளது. சமீபத்தில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்தது என்பதை தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளதை அடுத்து கோவை சரளாவின் நடிப்பை குடும்பத்துடன் காண வாய்ப்பு உள்ளதால் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கின்றது.

மேலும் ‘வீகம்’ என்ற மலையாள திரைப்படம் ஜீ ஓடிடியிலும், ’முகசித்திரம்’ என்ற மலையாள திரைப்படம் ஆஹா ஓடிடியிலும் ரிலீஸாகவுள்ளது. மேலும் கடந்த ஆண்டு நவம்பரில் ரிலீஸாகி உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்த ஹாலிவுட் திரைப்படமான ‘BlackPanther Wakanda Forever’ என்ற ஆங்கில திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியிலும், Viking Wolf என்ற ஆங்கில திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் ரிலீசாகவுள்ளது.

மேலும் ‘ஜெஹனாபாத்’ என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் Infiesto என்ற ஸ்பானிஷ் திரைப்படம் மற்றும் ‘lyle lyle crocodile’ என்ற ஆங்கில திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.

 

More News

மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் கிரிக்கெட் வீரர் .. அசத்தல் புகைப்படங்கள்!

பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் பொல்லார்டு தனது மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

'தளபதி 67' ரிலீஸ் தேதி லாக்.. பக்கா பிளான் போடும் லோகேஷ் கனகராஜ்..!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'தளபதி 67'. அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில்

முதல்முறையாக மகளின் முகத்தைக் காட்டிய நடிகை பிரியங்கா சோப்ரா… க்யூட் புகைப்படங்கள்!

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தகவல் ரசிகர்களைக் கடும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

செல்ல மகளுடன் டிரெக்கிங் சென்ற பிரபல கிரிக்கெட் வீரர்… வைரலாகும் புகைப்படங்கள்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராகக் கருதப்படும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினர்

'எண்ணம் போல் வாழ்க்கை': தனுஷின் 'வாத்தி' செம அப்டேட்..!

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் இறுதி கட்ட போஸ்ட் புரடொக்சன்  பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது. பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும்