close
Choose your channels

விஜய்சேதுபதியின் 'டிஎஸ்பி' உள்பட இந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்!

Wednesday, November 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தமிழ் திரையுலகில் குறைந்தபட்சம் நான்கு திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை 6 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த ஆறு படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

டிஎஸ்பி: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த இந்தப் படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார் என்பதும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது என்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி அடைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கோல்டு: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் ’கோல்டு’ திரைப்படத்தை ‘பிரேமம்’ இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தில் நாயகனாக பிரித்விராஜ் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் டீசர் டிரைலர் பாடல்கள் உள்பட எந்த விதமான புரமோசஷனும் இல்லாமல் வெளியாக இருப்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

கட்டா குஸ்தி: விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் நாயகியாக ’பொன்னியின் செல்வன்’ சமுத்திரகுமாரி ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் பிரபல தெலுங்கு நடிகர் ராணா இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

மஞ்சக்குருவி: புதுமுகங்கள் மற்றும் பிரபல குணசித்திர நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தின் நாயகியாக நீரஜா என்பவர் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷனுக்காக தெருவில் இறங்கி போஸ்டரை ஒட்டினார் என்பதும், இதுகுறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது.

மேலும் இந்த வாரம் ’ஈவில்’ என்ற படமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.