இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடராஜன் இடம் பெறுவாரா? தேர்வுக்குழு பட்டியல்!

வரும் பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணியுடன் நடைபெற உள்ள முதல் இரு டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்ப் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடராஜன் அடுத்தடுத்து வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் முதல் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இவரது பெயர் இடம் பெறவில்லை. ஆனால் டி20, ஒருநாள் போட்டிகளில் இவருக்கு வாயப்பு கிடைக்குமா என எதிர்ப்பார்ப்பு எழுந்து உள்ளது.

பிப்ரவரி மாதம் முதல் இங்கிலாந்து அணி, இந்தியாவில் பயணித்து 4 டெஸ்ட் போட்டிகள், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும், அடுத்த இரு போட்டிகள் அகமதாபாத்திலும் நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் முதல் இரு போட்டிகளுக்கான அணி வீரர்களை தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழு அறிவித்து உள்ளது. அதில் தமிழக வீரர் நடராஜன் பெயர் இடம்பெற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த அணிக்கு கேப்டனாக விராட் கோலி தலைமையேற்க உள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் முதல் போட்டியில் மட்டும் பங்கேற்று விட்டு தாயகம் திரும்பினார் விராட் கோலி. அதனால் ரஹானே மற்ற 3 போட்டிகளுக்கும் கேப்டனாக வழிநடத்தினார். இவரது வழிகாட்டலில் அனைத்து வீரர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்த முடிந்தது. இதனால் இந்திய அணி 33 ஆண்டு கால வரலாற்று சாதனையையும் முறியடித்து உள்ளது. எனவே இதேபோன்ற கேப்டன்சி கோலியிடமும் தொடருமா என்பதுபோன்றும் ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடருக்கு செல்லாம் இருந்த வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா இந்திய அணிக்குள் மீண்டும் வந்துள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் அணயில் இடம்பெறுகிறார். இவர்களைத் தவிர முதல் இரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பட்டியலில் காயத்துக்கான மாற்று வீரர்களாக பிரியங்கா பஞ்சல், கே.எஸ்.பரத், அபிமன்யு ஈஸ்வரன், ஷான்பாஸ் நதீம் ராகுல் சாஹர் ஆகியோர் பெயர் இடம்பெற்று உள்ளது.

வலைப் பந்து வீச்சாளர்களாக அங்கித் ராஜ்புத், ஆவேஷ் கான், சந்தீப் வாரியர், கே.கவுதம், சவுரப் குமார் போன்றோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனால் கேப்டனாக விராட் கோலி, துணை கேப்டனாக ரஹானே, ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, விருத்திமான் சஹா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் ஆகியோர் அணியில் இடம்பெற்று உள்ளனர்.

More News

நாசமா போகட்டும்: பிரபல இயக்குனரின் விரக்தி பதிவு!

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என தமிழ் இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விரக்தியாக பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சிம்புவின் ஆட்டத்தை பார்க்க வெயிட்டிங்: பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி!

சிம்புவின் ஆட்டத்தைப் பார்க்க தான் காத்திருப்பதாக பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது சிம்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது 

ரூ.25 கோடி நஷ்ட ஈடு: 'மாஸ்டர்' தயாரிப்பாளர் அனுப்பிய நோட்டீஸால் பரபரப்பு!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் அவர்கள் ரூபாய் 25 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடியாக சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டுவிட்டரில் இணைந்த தமிழ் நடிகையின் மகள்: முதல் பதிவில் தளபதி விஜய்

தமிழ் திரை உலகினர் உள்பட உலகில் உள்ள முக்கிய செலிபிரிட்டிகள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்து இருப்பார்கள் என்பதும் தாங்கள் நடித்துக்கொண்டிருக்கும் படங்கள்