பிரபல இயக்குநருக்கு நன்றி தெரிவித்த இளம் நடிகை… வைரலாகும் உருக்கமான பதிவு!

  • IndiaGlitz, [Tuesday,April 19 2022]

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து திறமையான நடிகை எனப்பெயர் பெற்ற நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் தற்போது இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து “நானே வருவேன்“ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த அனுபவம் பற்றி அவர் கூறிய கருத்துகள் சமூகவலைத் தளத்தில் கவனம் பெற்றுள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “மேயாத மான்“ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகை இந்துஜா. அதற்குப் பிறகு “மகாமுனி“ திரைப்படத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தென்னிந்திய சர்வதேசத் திரைப்படங்களுக்கான விருதினைத் தட்டிச்சென்றார். மேலும் “மெர்குரி“, “பூமராங்“, “பிகில்“ என அடுத்தடுத்து சிறந்த நடிப்பை வெறிப்படுத்திய இவருக்கு 11 வருடங்களுக்குப் பிறகு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் “நானே வருவேன்“ திரைப்படத்தில் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் இரண்டு கதாநாயகிகளுள் ஒருவராக நடித்து முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அனுபவம் பற்றிய பேசியுள்ள அவர் செல்வராகவன் படத்தில் பணிபுரிந்த விலைமதிப்பற்ற அனுபவத்திற்கு நன்றி. எனக்கு மிகவும் பிடித்தமான செல்வராகவன் சார் உடன் பணிபுரிந்ததைப் பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் எனக்குள் இருக்கும் குழந்தை ஆட்டம்போடுது… என உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகை இந்துஜா இயக்குநர் செல்வராகவனுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் “நானே வருவேன்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'கூகுள் குட்டப்பா'!

பிக்பாஸ் போட்டியாளர்களான தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடித்த 'கூகுள் குட்டப்பா' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

நள்ளிரவில் திடீரென பிரபல இயக்குனருக்கு போன் போட்ட ரஜினிகாந்த்: என்ன காரணம்?

 பிரபல இயக்குனருக்கு நள்ளிரவில் திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் போட்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஜனாதிபதி வேட்பாளரா இளையராஜா? பாஜகவின் வியூகத்தால் திமுகவுக்கு சிக்கலா?

இசைஞானி இளையராஜா குறித்த செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக தலைப்பு செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய ஜனாதிபதி வேட்பாளராக இளையராஜா நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக

வேறு எதுவுமே இல்லையா? இளையராஜா விவகாரம் குறித்து தங்கர்பச்சான் கேள்வி!

இசைஞானி இளையராஜா சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் சட்டமேதை அம்பேத்கர் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்

வடிவேலுவின் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் செம டான்ஸ்: நடன இயக்குனர் யார் தெரியுமா? 

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பின்னர் முக்கிய வேடத்தில் நடித்துவரும் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது