பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவின் வெற்றிக்கு குவிந்து வரும் வாழ்த்துக்கள்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

கடந்த 15ஆம் தேதி தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்தியா 336 ரன்கள் எடுத்து 33 ரன்கள் பின்தங்கி இருந்தது

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 294 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 328 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சில் மிக அபாரமாக விளையாடி 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது

இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரிஷப் பண்ட் கடைசிவரை அவுட் ஆகாமல் அபாரமாக விளையாடி 89 ரன்கள் எடுத்ததே இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதும் இவர் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதினையும் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் மற்றொரு பேட்ஸ்மேனான கில் 91 ரன்கள் எடுத்தார் என்பதும் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் அறிமுகமான இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது தமிழர்களுக்கும் பெருமை என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஒரே ஒரு ஷாட்டுக்கு வெயிட்டிங்: படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்த நடிகர்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

ஆஸ்திரேலிய வரலாற்றுச் சாதனையில் இந்தியக் கேப்டன் செய்த ஒரு அசத்தல் காரியம்… குவியும் பாராட்டு!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு ஒருநாள் போட்டி, டி20 போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டது.

பிரதமர்-தமிழக முதல்வர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன? முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார்.

அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை- தமிழக முதல்வர் திட்டவட்டம்!

அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

சிவகார்த்திகேயனை பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்த பிரபல நடிகை!  

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டாக்டர்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்